(ப.பன்னீர்செல்வம்)

வெளிநாடுகளில் தொழில்புரியும் இலங்கையர்களின் குடும்பங்களிற்காக கதிர்காமத்தில் சுற்றுலா விடுதியொன்று நிர்மாணிக்கப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நாளை வியாழக்கிழமை காலை 10.34சுபவேளையில் அமைச்சர் தலதா அதுகோரலவின் தலைமையில் இடம்பெறவுள்ளது. 

வெ ளிநாடுகளில் தொழில்புரியும் இலங்கையர்களின் குடும்பங்களிற்காக சுற்றுலா தங்குமிட விடுதி அமைக்கப்படவுள்ளது. இதில் குறைந்த கட்டணத்தில் தங்குவதற்கான இடவசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளது என்றும் வெ ளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு அறிவித்துள்ளது.