இலங்கையில் முதலாவது ஸ்தானத்தில் திகழும் ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான Huawei, இன்று இடம்பெற்ற விமர்சையான அறிமுக நிகழ்வில் nova3 மற்றும் nova3i ஆகிய புத்தாக்கத்துடனான தனது nova3 series ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி வைத்துள்ளது. Huawei Device Sri Lanka நிறுவனத்தின் இலங்கைக்கான தலைமை அதிகாரியான பீட்டர் லியு, சிங்கர் ஸ்ரீலங்கா பீஎல்சி குழும பிரதம நிறைவேற்று அதிகாரியான அசோக பீரிஸ்,பிரதம தொழிற்பாட்டு அதிகாரியான மகேஷ் விஜேவர்த்தன மற்றும் சந்தைப்படுத்தல் துறை பணிப்பாளரான குமார் சமரசிங்க, டிஜிட்டல் மீடியா பணிப்பாளரான ஜகத் பெரேரா, டயலொக் மொபைல் தொலைதொடர்பாடல் சாதனங்கள் விற்பனைத் துறை தலைமை அதிகாரியான அயோமல் குணசேகர, மொபிடெல் நிறுவனத்தின் தரவு, சாதனங்கள் மற்றும் நிறுவன மூலோபாயத் துறை சிரேஷ்ட முகாமையாளரான யசிரு அபேகுணவர்த்தன மற்றும் முகவர்கள் ஏனைய பிரமுகர்கள் உள்ளிட்டவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர். இசைக் கலைஞர்களான ரெய்னி சாருகா குணதிலக,டெஹான் பெரேரா மற்றும் புதுமுக நடிகையும் மாடலிங் துறை பிரபலமுமான ஒஷதி ஹிமாஷா ஆகியோரும் நிகழ்வில் பங்குபற்றினர். பாவனையாளர்களின் அனுபவத்தை வாழ்வில் முழுமையான ஒன்றாக மாற்றியமைக்கும் வலுவூட்டலுடன் முதன்முறையாக AI நான்கு கேமரா தொழில்நுட்ப சிறப்பம்சம் கொண்ட இரு ஸ்மார்ட்போன்களை Huawei அறிமுகப்படுத்தியுள்ளது. HUAWEI nova3 மற்றும் HUAWEI nova3i ஆகிய இரண்டும் 24 MP பிரதான கேமரா மற்றும் 2MP இரண்டாவது கேமரா என இரட்டை முன்புற கேமராக்களைக் கொண்டுள்ளன. அவற்றுள் பிரதான கேமரா புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தத்ரூபமான தெளிவுடன் வசப்படுத்துவதுடன், இரண்டாவது கேமராவானது தரவு ஆழத்தை கவனித்துக் கொள்கின்றது. விம்பத்தின் மீது தெளிவான பிம்பத்தை செலுத்துவதற்கு இரு சென்சார்கள் தொழிற்படுவதுடன், மனித கண்களுக்கு ஒப்பான பார்வையுடன் புகைப்படங்களை வசப்படுத்தி உண்மையில் அவற்றை உயிரோட்டமான புகைப்படங்களாக மாற்றியமைக்கின்றன.HUAWEI nova3 இன் பின்புற கேமராவானது 24MP monochrome மற்றும் dual f/1.8 wide aperture 6p lenses உடனான16MP RGB sensor ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த இணைப்பானது இருண்ட அல்லது வெளிச்சம் குறைவான சூழல்களிலும் கவர்ச்சியான படங்களை வசப்படுத்த சாதனத்திற்கு இடமளிப்பது மட்டுமன்றி,புகைப்படங்களை முழுமையான கட்டுப்பாட்டில் பேணவும் வழிகோறுகின்றது. HUAWEI nova3i ஆனது 16MP primary sensorமற்றும் 2MP secondary sensorஆகியவற்றின் இணைப்புடன் வலுமிக்க பின்புற கேமராக்களைக் கொண்டுள்ளது. அதில் முதலாவது தத்ரூபமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வசப்படுத்த இடமளிப்பதுடன் இரண்டாவது தொழில்நேர்த்தியான bokeh விளைவுடன் ஆழமான தரவு விபரத்தைத் தோற்றுவித்து, புகைப்படங்களை அதிக இயற்கையான தோற்றம் கொண்டவையாக மாறச் செய்கின்றது.HUAWEI Devices Sri Lanka நிறுவனத்தின் இலங்கைக்கான தலைமை அதிகாரியான பீட்டர் லியு கூறுகையில், “இலங்கைச் சந்தையில் Huawei nova3 series இன் அறிமுகத்துடன் இப்புதிய உற்பத்தி வரிசையின் மூலமாக அறிமுகப்படுத்தப்படும் AI தொழில்நுட்பத்தின் மகிமைகளை எமது வாடிக்கையாளர்கள் மற்றும் ஸ்மார்ட்போன் ஆர்வலர்கள் அனுபவித்து மகிழ்வர் என உத்தரவாதம் அளிக்கின்றோம். அதிசிறந்த தொழில்நுட்பம், தரம் மற்றும் Huaweiவழங்கும் சேவை ஆகியவற்றின் பக்கபலத்துடன் குறிப்பாக இளம் தலைமுறையினரை இலக்காகக் கொண்டு இச்சாதனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன,” என்று குறிப்பிட்டார். இளம் தலைமுறையினர் நவநாகரித்தை அச்சொட்டாகப் பிரதிபலிக்கும் வகையில் நவீன பாணியிலான வெளித்தோற்றம் மற்றும் உன்னிப்பான வேலைப்பாட்டு வடிவமைப்பினை HUAWEI nova3 மற்றும் HUWAEI nova3i ஆகியன கொண்டுள்ளன. இந்த இரு சாதனங்களும் 6.3-அங்குலFHD+ (2340x1080) 19.5:9 FullViewமுகத்திரையின் புதிய தலைமுறை வடிவத்தைக் கொண்டுள்ளன. இந்த தொழில்நுட்ப அம்சங்கள் முன்னைய தொலைபேசி சாதனங்களுடன் ஒப்பிடுகையில் மெல்லிய தோற்றத்தை சாதனங்களுக்கு வழங்கும் அதேசமயம் பாரிய மற்றும் கூர்மையான படங்களை வெளிக்கொணரவும் முகத்திரைக்கு இடமளிக்கின்றன. மேலும் இரு சாதனங்களும் பல்வேறுபட்ட கவர்ச்சியான வர்ணங்களில் வெளிவந்துள்ளன. HUAWEI nova3 மற்றும் HUAWEI nova3iஆகிய இரண்டும் நீல நிறத்திலிருந்து ஊதா நிறத்திற்கு மென்மையான மாற்றங்களுக்கு உள்ளாகுவது போல சாய்வுடனான தோற்றமளிக்கும் “Iris Purple”என்ற நவீன பாணியிலான, தனித்துவமான வர்ணத்தில் கிடைக்கப்பெறுகின்றன. அற்புதமான சாய்வுத் தோற்றத்திற்காக இரு Huawei சாதனங்களும் கண்ணாடி பலகங்களை (glass panel)கொண்டுள்ளன. HUAWEI nova3 பக்கங்களும் ஒரு மென்மையான இரட்டை வளைவுடனான கண்ணாடி பலகத்தால் உருமறைப்புச் செய்யப்பட்டுள்ளதுடன், கறுப்பு நிற பலகமானது சாய்வுத் தோற்றத்தை நேர்த்தியான கட்டமைப்புக் கொண்டதாக மாற்றியமைக்கின்றது.AI பணி இலக்குகளை நடைமுறைப்படுத்துவதற்கென பிரத்தியேகமான Neural Processing Unit ஐக் கொண்ட flagship-class high performance Kirin 970 SoC இன் வலுவூட்டலை HUAWEI nova3 கொண்டுள்ளது. NPU மற்றும் Huawei இன் HiAI mobile computing architecture ஆகியவற்றை இணைத்து,Kirin 970ஆனது AI computations சார்ந்த மிகச் சிறந்த தொழிற்பாட்டை வழங்குவதுடன் பாரம்பரியமான CPU ஒப்பிடுகையில் 50 தடவைகள் மேம்பட்ட தொழிற்பாட்டுத்திறனையும்ரூபவ் 25 தடவைகள் மேம்பட்ட செயற்திறனையும் வழங்குகின்றன. விரைவான செயற்பாட்டை உறுதிப்படுத்தும் GPU turbo உடன் மிகச் சிறந்த விளையாட்டு (gaming) அனுபவத்தையும் nova3 series வழங்குகின்றது. கிராபிக் நடைமுறை செயற்திறனை(graphic processing efficiency) 60% வரை அதிகரிக்கச் செய்து. மொபைல் தொலைபேசிகளின் வேகத்தை மகத்தான அளவில் மேம்படுத்துவதற்கு இடமளிக்கும் வகையில், EMUI operating system மற்றும் GPU க்கள் மற்றும் CPU க்கள் ஆகியவற்றுக்கிடையில் செயலாக்க சிக்கலை அகற்றுவதை விரைவுபடுத்துகின்ற புரட்சிகரமான,மென் மற்றும் வன் கூட்டு கிராபிக்ஸ் தொழிலநுட்பமே GPU Turbo ஆகும். விளையாட்டுக்களை விளையாடும் போது மின்வலுவின் நுகர்வினை 30% வரை குறைக்கும் கூடுதல் பயனையும் அது கொண்டுள்ளது.Huawei nova3i ஆனது புதிய HiSilicon Kirin 710 SoC மற்றும் 3340mAh பற்றரி ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளதுடன், Nova3 ஆனது HiSilicon Kirin 970 SoC மற்றும் 3750mAh பற்றரி ஆகியவற்றின் வலுவூட்டலைக் கொண்டுள்ளது. இரு கைத்தொலைபேசி சாதனங்களும் 19.5:9 முகத்திரைகள் மற்றும் உச்ச வடிவமைப்புக்களைக் கொண்டுள்ளன.அதன் AI தொழில்நுட்பமானது தனித்துவமான 3D Qmoji mimics தொடர்பில் பயனர்களின் முகபாவங்கள் மற்றும் தத்ரூபமாக்கப்பட்ட பிரதிபலிப்புகள், விநோதமான வீடியோக்கள் (animated videos) ஆகியவற்றை மிக இலகுவாக ஒரு தடவை கிளிக் செய்வதன் மூலமாக நண்பர்களுடன் பகிர்வு செய்ய முடியும். ஏனைய AI தொழில்நுட்ப சிறப்பம்சங்களைப் பொறுத்தவரையில், பாவனையாளர்கள் எந்தவொரு உற்பத்தியையும் ஸ்கானிங் செய்வதன் மூலமாக இணைய விற்பனை ஊடக நிலையத்தில் இந்த உற்பத்தியை உடனடியாக தேடிக் கண்டறிந்து, வாடிக்கையாளரை அதனுடன் தொடர்புபடுத்துவதற்குAI Shopping தொழில்நுட்பம் உதவுகின்றது. மற்றுமொரு தொழில்நுட்ப சிறப்பம்சமாக புகைப்படங்களை இனங்கண்டு அவற்றை வகைப்படுத்துவதற்கு இடமளிக்கின்ற AI gallery என்ற தொழில்நுட்பமானது பாவனையாளர்கள் தமது தொலைபேசியின் வைப்பகத்தில் சேமித்துள்ள புகைப்படங்களை மக்கள் அல்லது இடம் என்ற அடிப்படையில் விரைவாக அடையப் பெற இடமளிக்கின்றது.Huawei nova3 மற்றும் nova3i ஆகியன ஒரு வருட உத்தரவாதத்துடன் கிடைக்கப்பெறுவதுடன், அனைத்து Huawei அனுபவ மையங்கள் ஊடாக வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கப்பெறுகின்றன. இலங்கையில் ஸ்மார்ட்போன்களைச் சந்தைப்படுத்துவதில் முன்னிலை வகித்து வருகின்ற சிங்கர் ஸ்ரீலங்கா பீஎல்சி nova3 series சாதனங்கள் நாடளாவியரீதியில் கிடைக்கப்பெறுவதை உறுதி செய்கின்றது.தெரிவு செய்யப்பட்ட டயலொக் மற்றும் மொபிடெல் விற்பனை மையங்கள் மற்றும் அனுபவ மையங்களிலும் புதிய சாதனங்கள் விற்பனை செய்யப்படவுள்ளதுடன்,Huawei nova3 ஆனது ரூபா 79,900 என்ற விலையிலும், Huawei nova3iஆனது ரூபா 49,900 என்ற விலையிலும் கிடைக்கப்பெறுகின்றன.கடந்த வாரம் IDC வெளியிட்டுள்ள தரவு அறிக்கையின் பிரகாரம் அண்மையில் உலகில் இரண்டாவது ஸ்தானத்தில் திகழும் ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமாக அது தனது போட்டியாளரைப் பின்தள்ளி எழுச்சி கண்டுள்ளதாக குறிப்பிட்படப்பட்டுள்ளது.அண்மைய புகமு அறிக்கைகளின் பிரகாரம் இலங்கையில் ஸ்மார்ட்போன் விற்பனையில் அது முதலாவது ஸ்தானத்தில் திகழ்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டில், BrandZ இன் முதல் 100 ஸ்தானங்களிலுள்ள மிகவும் பெறுமதிவாய்ந்த சர்வதேச வர்த்தகநாமங்கள் தரப்படுத்தலில் 48 ஆவது ஸ்தானத்திலும், Forbes இன் உலகில் மிகவும் பெறுமதிவாய்ந்த வர்த்தகநாமங்கள் தரப்படுத்தலில் 79 ஆவது ஸ்தானத்திலும், Brand Finance இன் உலகின் மிகவும் பெறுமதிமிக்க 500 வர்த்தகநாமங்கள் தரப்படுத்தலில் 25 ஆவது ஸ்தானத்திலும் HUAWEI தரப்படுத்தப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டில் Interbrand இன் மிகச் சிந்த சர்வதேச வர்த்தகநாமங்கள் தரப்படுத்தலில் 70 ஆவது ஸ்தானத்தை Huawei பிடித்துள்ளது. இந்த ஆண்டின் ஆரம்பத்தில் Fortune 500 நிறுவனங்கள் பட்டியலிலும் 83 ஆவது ஸ்தானத்தில் Huawei தரப்படுத்தப்பட்டிருந்தது.
nova3 Series ஸ்மார்ட்போன்களை இலங்கையில் அறிமுகப்படுத்தியது Huawei
Published By: Priyatharshan
07 Aug, 2018 | 05:57 PM

-
சிறப்புக் கட்டுரை
ஜே.வி.பி அரசாங்கத்தின் அச்சம்
23 Mar, 2025 | 05:41 PM
-
சிறப்புக் கட்டுரை
உள்ளூராட்சி தேர்தல்களில் தமிழ் மக்கள் எவ்வாறு...
24 Mar, 2025 | 12:18 PM
-
சிறப்புக் கட்டுரை
தேசபந்துவை ஒளித்து வைத்திருந்த தரப்பினர் யார்...
22 Mar, 2025 | 05:35 PM
-
சிறப்புக் கட்டுரை
பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை அரசாங்கத்திற்கு எதிரான...
16 Mar, 2025 | 02:32 PM
-
சிறப்புக் கட்டுரை
பட்டலந்த அறிக்கை - ரணில் மீது...
15 Mar, 2025 | 06:25 PM
-
சிறப்புக் கட்டுரை
' நாடு அநுராவோடு, ஊர் எங்களோடு'; ...
09 Mar, 2025 | 10:32 PM
மேலும் வாசிக்க
முக்கிய செய்திகள்
தொடர்பான செய்திகள்

ஓய்வூதியம் பெறுவோருக்கான டிஜிட்டல் முறையிலான புகையிரத...
2025-03-26 11:21:11

பாதெனிய, ஸ்ரீ சுனந்த மகா வித்தியாலயத்தில்...
2025-03-26 14:11:15

ஆறாவது தடவையாக 2025ஆம் ஆண்டுக்கான 'School...
2025-03-25 18:01:02

முடிவடைந்த ஆண்டுக்கான இலாபத்தை ரூ.1,150 மில்லியனாக...
2025-03-25 15:13:59

SLISB மறுசீரமைப்பு இழப்பான 45 பில்லியன்...
2025-03-25 14:26:31

2024 தேசிய விற்பனை விருது வழங்கும்...
2025-03-25 12:37:59

Prime Group வீட்டு உரிமையாண்மை மற்றும்...
2025-03-24 20:22:43

அபேக்ஷா மருத்துவமனையின் இளம் நோயாளிகளுக்கான செலான்...
2025-03-20 11:03:29

ACCA Srilanka Awards 24 விருதுகள்...
2025-03-20 10:45:24

Tata Motors, DIMO உடன் இணைந்து,...
2025-03-19 09:47:50

மக்கள் வங்கி ஒருங்கிணைந்த மொத்த வருமானமாக...
2025-03-18 11:55:47

கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM