கடவத்தை பகுதியில்  மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

குறித்த துப்பாக்கிப் பிரயோகம் கடவத்தை, கொனஹேன பகுதியில் இடம்பெற்றுள்ளது.

காயமடைந்த பெண் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.