பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய கொலன்னாவையைச் சேர்ந்த பொடி விஜே என அழைக்கப்படும் ஹேவா தந்தரலாகே சிசிற குமார பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையிலேயே பொடி விஜே கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து வாள் ஒன்று கைப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த சந்தேக நபர் சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வு, கொள்ளை சம்பவங்கள் மற்றும் போதைப் பொருள் வியாபாரம் என்பவற்றுடன் தொடர்பு பட்டு பொலிஸாரால் வலை வீசி தேடப்பட்டு வந்தவராவார்.

பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக  வெல்லம்பிட்டிய பொலிஸாரிடம் சந்தேக நபர் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

பொடி விஜே வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் இடம் பெற்ற கொலை சம்பவமொன்றுடன் நெருங்கிய தொடர்புபட்டுள்ளார் என கைது செய்யப்பட்டு 3 மாத காலம் சிறை தண்டனை அனுபவித்து விட்டு விடுதலை பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது