இந்­திய கேரள மாநி­லத்தில் முதியோர் கல்வி திட்­டத்தின் கீழ் கல்வி கற்ற 96 வய­தான வயோ­திபப் பெண்­ணொ­ருவர்  பரீட்சை எழு­தி­யுள்ளார்.

கேர­ளாவில் முதியோர் கல்­வித்­திட்­டத்தின் கீழ் படித்து வரும் முதி­யோ­ருக்கான பரீட்­சைகள் நடந்து வரு­கி­றது. மாநிலம் முழு­வதுமுள்ள 40 ஆயிரம் முதியோர்கள் இந்த பரீட்­சையை எழு­தி­யுள்­ளனர். இதில் செப்­பேடு, கனிச்­ச­நல்லூர், அரச ஆரம்ப பாட­சா­லையில் கார்த்­தி­யா­யினி அம்மா என்ற 96 வயது வயோ­திபப் பெண் பரீட்சை எழு­தி­யுள்­ள­துடன்,  இப்­ப­ரீட்சை எழு­தி­ய­வர்­களில் இவரே  அதிக வய­து­டை­யவர் என பரீட்சை அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர்.

இது­கு­றித்து கார்த்­தி­யா­யினி அம்மா கூறு­கையில், பரீட்­சையில் படித்த பாடங்­க­ளி­லி­ருந்து வர­வில்லை, தெரி­யாத கேள்­விகள் கேட்­கப்­பட்­ட­தாக கவ­லை­யுடன் தெரி­வித்­துள்ளார். 

மேலும், 96 வய­தாகும் எனக்கு இது­வரை உடல் நலக்­கு­றை­வுக்­காக மருத்­து­வ­ம­னைக்கு சென்­ற­தில்லை. நான் தினமும் 4 மணி நேரம் நடை­ப­யிற்சி செய்­வது தான் எனது ஆரோக்­கி­யத்­திற்கு காரணம் என்றும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.