வெலிக்கடை சிறைச்சாலை படுகொலை சம்பவத்துடன் தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவரையும்  தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறைச்சாலை ஆணையாளர் எமில்ரஞ்சன் லாமஹேவா மற்றும் பொலிஸ் பரிசோதகர் ரங்கஜீவ ஆகியோரை இன்று கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே அவர்களுக்கு இம்மாதம் 21 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.  

2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட தூப்பாக்கி சூட்டில் 27 கைதிகள் கொல்லப்பட்ட வழக்கில் கடந்த மார்ச் மாதம் 28ஆம் திகதி இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.