இத்தாலியின் பொலோக்னா விமான நிலையத்தின் அருகில் உள்ள பாலம் ஒன்றில் இரண்டு லொறிகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன் 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

வட இத்தாலியின் போலோக்னா விமான நிலையத்தின் அருகல் உள்ள பாலம் ஒன்றில் கார்களை ஏற்றிச் சென்ற லொறியொன்றும் இலகுவில் தீப்பற்றி எரியக்கூடிய பொருட்களை ஏற்றிச் சென்ற லொறியொன்றும் ஒன்றுடன் ஒன்று மோதிய போது லொறி இரண்டும் தீப்பிடித்து வெடித்து சிதறியுள்ளது.

இந்த விபத்தினால் பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழ்ந்ததையடுத்து  லொறிகளிலிருந்து வெடித்து சிதறிய தீயானது பாலத்தின் கீழ்லிருந்த கார் தரிப்பிடத்திற்கு பரவியதனால் அங்கிருந்த பல்வேறு வாகனங்களும் தீக்கிரையாகியுள்ளன.

இந்த தீ விபத்தினால் இருவர் உயிரிழந்ததுடன் 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

குறித்த இந்த விபத்து தொடர்பாக தகவல் அறிந்த தீயணைப்பு பிரிவினர் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனையடுத்து காயமடைந்தவர்கள‍ை சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.