இங்கிலாந்தின் லூடன் பகுதியில் 7 மாதக் குழந்தையின் கண்களை தோண்டி கொடூரக் கொலை செய்ய முயன்ற நபருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி நடைபெற்றுள்ளது.

குறித்த பகுதியில் அமைந்துள்ள தொடர் மாடி வீடொன்றிலிருந்து குழந்தையின் அழு குரல் நீண்ட நேரமாக கேட்டதையடுத்து அயலவர்கள் குறித்த வீட்டினுள் சென்று பார்த்த போது மர்ம நபர் ஒருவர் 7 மாத குழந்தையினை கையில் ஏந்தியவாறு மரத்தை துளையிடும் கருவியால் குழந்தையின் கண்களை தோண்டி எடுக்க முயற்சித்து கொண்டிருந்தள்ளார்.

இதை கண்ட மக்கள் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டதையடுத்த குறித்த நபர் குழந்தையை 2 மாடியிலிருந்து ஜன்னல் வழியாக குழந்தையை தூக்கி எறிந்துள்ளார்.

கீழே வீசி எறியப்பட்ட குழந்தையை அயலவர்கள் மீட்டு வைத்தியசாலைக்கு உடனே அனுப்பி வைத்ததோடு பொலிஸாருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த நபரை கைது செய்ததோடு அவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தனர்.

இதனிடையே குழந்தையின் தாயை குறித்த நபர் கத்தியால் குத்தி இரத்த வெள்ளத்தில் மிதக்கச் செய்துள்ளார்.

தாயையும் பொலிஸார் மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 31 வயதான சீன் ஸீமிலிஸ் என பொலிஸார் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

வழக்கை விசாரித்த நீதி மன்றம் குறித்த நபருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.