இலங்கை கடற்பரப்பு மீதான இந்திய ஆக்கிரமிப்பிற்கு தீர்வு காணாது , அந்த நாடுடன் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது எவ்விதத்தில் நியாயப்படுத்த முடியும் என கேள்வியெழுப்பியுள்ள முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், மனித உரிமைகள் தொடர்பில் பேசும் அரசாங்கத்திற்கு அடிப்படை உரிமைகளை மதிக்க தெரியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ராஜகிரியவில் அமைந்துள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் பேர்தே பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில் ,
அரசாங்கத்தின் செல்வாக்கு மக்கள் மத்தியில் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. தேர்தல் என்பது மக்களின் ஜனநாயக உரிமையாகும் . ஆனால் அரசாங்கம் உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்தாது மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளது. இன்று 90 வீதத்திற்கும் அதிகமான உள்ளுராட்சி மன்றங்கள் முழு அளவில் செயழிழந்துள்ளது. இவ்வாறு ஜனநாயக ரீதியிலான நெருக்கடிகளை மக்கள் மீது பிரயோகித்து பாரிய பிரச்சனைகளை மூடி மறைக்கின்றது.
எமது கடற்பரப்பிற்குள் அத்து மீறி நுழையும் இந்திய மீனவர்கள் இலங்கை மீனவர்களை தாக்கி விட்டு செல்கின்றனர். இந்தியாவின் இந்த அத்துமீறிய ஆக்கிரமிப்பை எதிர்கொள்ள முடியாது அரசாங்கம் வலுவிழந்துள்ளது. நிலைமை இவ்வாறு இருக்க பொருளாதார மற்றும் தொழில் நுட்பத்தை மையப்படுத்திய இலங்கை - இந்திய கூட்டு ஒப்பந்தத்திற்கு கைச்சாத்திட முயற்சிப்பது எவ்வகையில் நியாயமாகும். இந்த கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் அரசாங்கம் உண்மைகளை வெளியிட வில்லை. வெறும் வரைபில் கைச்சாத்திடுவதாகவே அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் இரு நாடுகளுக்கு இடையில் மேற்கொள்ளப்பட உள்ள கூட்டு ஒப்பந்தம் ஒன்றின் வரைபில் கைச்சாத்திடுவது என்பது அடுத்த நகர்வுகளுக்கு சட்ட ரீதியான அனுமதி வழங்குவதாகும்.
எனவே இந்த கூட்டு ஒப்பந்தம் எமது நாட்டின் பொருளாதாரத்தை பாதாளத்திற்கு கொண்டு செல்லும் நடவடிக்கையாகும். இந்தியாவில் இருந்து அவசர அம்பியுலன்ஸ் சேவையை கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளனர். இது அரசாங்கத்தின் தனியார்மயமாக்கும் நோக்கத்தின் வெளிப்பாடாகவே அமைகின்றது என அவர் குறிப்பிட்டார்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM