திமுக தலைவர்   கருணாநிதி உடல்நிலையில் பின்னடைவு என்ற செய்தி வெளியானதை தொடர்ந்து அவர் கிசிச்சை பெற்றுவரும் வரும் காவேரி மருத்துவமனை முன் தொண்டர்கள் இரவுவேளையில் மீண்டும் வந்து குவியத்தொடங்கியுள்ளனர்

காவேரி மருத்துவமனை முன்னால்  எழுந்துவா தலைவா என்ற கோசத்துடன் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.

இதேவேளை அரசியல் தலைவர்களும் பதட்டம் நிறைந்த முகங்களுடன் மருத்துவமனைக்கு படையெடுத்தன வண்ணமுள்ளனர்.மருத்துவமனையில் திமுகவின் முக்கிய தலைவர்களையும் சட்டமன்ற உறுப்பினர்களையும் காணக்கூடியதாகவுள்ளது.கவிஞர் வைரமுத்து திக தலைவர் வீரமணி போன்றவர்களும் மருத்துவமனையில் காணப்படுகின்றனர்.

இதேவேளை சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் பொலிஸார் குவிக்கப்படுவதை அவதானிக்க முடிவதாக தகவல்கள் வெளியாகின்றன.