திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் சிறிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது என காவேரி மருத்துவமனை இன்று மாலை அறிவித்துள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி கடந்த 10 நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து வந்த மருத்துவமனை இன்று  மாலை பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் மூப்பு காரணமாக அவரது உடல் உறுப்புகளை பராமரிப்பதில் நெருக்கடி காணப்படுவதாகவும் காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது.

தொடர்ந்து அவரிற்கு சிகிச்சை அளிக்கின்றோம் தற்போது அளிக்கப்படும் கிசிச்சையை அவரது உடல் எவ்வாறு ஏற்றுக்கொள்கின்றது என்பதை அடிப்படையாகவைத்தே அனைத்தையும் தீர்மானிக்க முடியும் என காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது.