பொல்காவெல  ரயில் நிலையத்துக்கு அருகில் இரு ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 32 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கொழும்பில் இருந்து பதுளை நோக்கி செல்லும் ரயில் சேவை இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை ரயில் விபத்தில் காயமடைந்த பயணிகள் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த ரயில் விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள பொது முகாமையாளர் தலைமையில் விசேட குழு நியமிக்கப்படடுள்ளமை குறிப்பிடத்தக்கது.