(எஸ்.ரவிசான்)



கடந்த வருடம் நடை பெற்று முடிந்த கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சையின் பெறுபேறுகளை இம்மாதம் வெளியிட அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் அமைந்துள்ள கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையொன்றிலேயே இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எம்.என். ஜே.புஸ்பகுமார மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.
கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் நாடளாவிய ரீதியில் நடைபெற்று முடிந்த கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சையில் நாடளாவிய ரீதியில் தனிப்பட்ட பரீட்சாத்திகள், பாடசாலை பரீட்சாத்திகள் உள்ளடங்களாக மொத்தமாக 6 இலட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பரீட்சாத்திகள் தோற்றியிருந்தனர்.
மேலும் கடந்த வருடம் நடைபெற்று முடிந்த கல்வி பொதுத்தராதர பரீட்சைகளில் அதிகமான பரீட்சாத்திகள் தோற்றிய ஒரு பரீட்சையாகவும் இது அமைந்தது.
அத்துடன் குறித்த பரீட்சையின் செயன்முறைப் பரீட்சைகள் அனைத்தும் இந்த மாதம் 5 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில் ஏனைய வருடங்களைப் போலவே இந்த வருடமும் இம் மாதம் இறுதியில் பெறுபேறுகளை வெளியிடுவதற்கு தேவையான அனைத்து விடயங்களையும் பரீட்சைகள் திணைக்களம் முன்னெடுத்து வருவதாக அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM