ஒசாமாபின் லேடனின் மகன் ஹம்ஜா பின்லாடன் செப்டம்பர் 11 தாக்குதலின் போது விமானங்களை கடத்துவதில் முக்கிய நபராக விளங்கினார் என குற்றம்சாட்டப்பட்ட முகமட் அட்டாவின் மகளை திருமணம் செய்தார் என ஒசாமா பின் லாடனின் குடும்பத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

கார்டியனிற்கு வழங்கிய பேட்டியின் போது அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர். ஹம்ஜா லாடன் அல்ஹைடாவில் முக்கிய பொறுப்புகளை வகிக்கின்றார்  அவர் தனது தந்தையின் மரணத்திற்காக பழிவாங்க காத்திருக்கின்றார் எனவும் பின் லாடனின் குடும்பத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஹம்ஜாவின் தாயார் ஓசாமா பின் லாடன் கொல்லப்பட்ட வேளை அவருடன் இருந்தவர் என்பர் குறிப்பிடத்தக்கது.

முகமட் அட்டாவின் மகளை அவர் திருமணம் செய்துள்ளார் என நாங்கள் கேள்விப்பட்டோம் என பின்லாடனின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அனைத்தும் முடிந்து விட்டது என நாங்கள் நினைத்தவேளை அவர் தந்தையின் மரணத்திற்காக பழிவாங்கப்போகின்றேன் என தெரிவித்தார் என  ஒசாமாவின் உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அவர் என்முன்னால் இருந்தால் கடவுள் உன்னை வழிநடத்தட்டும் எதனையும் செய்வதற்கு முன்னர் இரு தடவை யோசி என தெரிவிப்பேன் எனவும் உறவினர் தெரிவித்துள்ளார்.

உன்தந்தை பின்பற்றி பாதையில் செல்லாதே எனவும் தெரிவிப்பேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹம்ஜா மேற்குலகிற்கு எதிராக தாக்குதல்களை மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்து வந்துள்ளார் என்பதுடன் தற்போது அய்மன் அல் ஜவகிரிக்கு அடுத்த ஸ்தானத்தில் அல்ஹைடாவின் இரண்டாவது தலைவராக அவர் உள்ளார் என்ற ஊடகங்களும் வெளியாகியுள்ளன.

மேற்குலகநாடுகளின் புலனாய்வு அமைப்புகள் கடந்த இரண்டு வருட காலப்பகுதியில் அவர் குறித்து கவனம் செலுத்தி வருகின்ற ன அல்ஹைடா அமைப்பிற்கு மீண்டும் வலுசேர்க்க கூடியவராக அவர் விளங்குவார் என அவை கருதுகின்றன.

அவர்  அட்டாவின் மகளை திருமணம் செய்துள்ளமை செப்டம்பர் 11 தாக்குதலை  மேற்கொண்டவர்களே அல்ஹைதாவின் பலம் வாய்ந்த குழுவினராக விளங்குவதையும் அந்த அமைப்பு தொடர்ந்தும் ஒசாமாவின் பாரம்பரியத்தை பின்பற்றுவதையும் புலப்படுத்தியுள்ளது.