வவுனியாவில் இன்று முச்சக்கரவண்டி ஒன்று மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்த நிலையில்  வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா திருநாவற்குளத்தில் தாண்டிக்குளம் செல்லும் வீதியில் வேகமாக வந்த முச்சக்கர வண்டி எதிரே வந்த பஸ் ஒன்றுக்கு வழிவிட்ட நிலையில் முச்சக்கரவண்டி வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் படுகாயமடைந்தவர்கள் உடனடியாக அயலவர்களின் உதவியுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.