(நா.தினுஷா) 

அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவுகள் அதிகரிப்புக்கு ஐக்கிய தேசிய கட்சி ஆதரவளிக்காது. அரசாங்கமும் அந்த விடயம் தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கவில்லையென எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார். 

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவுகள் அதிகரிப்பது குறித்து ஊடகங்களுக்கு விளக்கமளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

கூட்டு எதிரணியினர் தமது அங்கீகாரத்தை தக்கவைத்துக் கொள்ளுவதற்காகவே அரசாங்கத்துக்கு எதிரான இதுபோன்ற விமர்சனங்களை முன்வைத்துவருவதாகவும் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கான அமைச்சரவை அனுமதி வழங்குவதற்கு இடமளிக்கப்போவதில்லை எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.