(பா.ருத்ரகுமார்)
நாட்டின் அபிவிருத்தி திட்டத்திற்கென நிதி வழங்க மத்திய வங்கி எந்நேரத்திலும் தயாராகவுள்ளதாக மத்திய வங்கி ஆளுனர் அர்ஜுன மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குறித்த நிதி சாதாரண மக்களின் நலனுக்காக எந்தளவு தூரம் சென்றடைகின்றது எனபதில் பெரும் சந்தேகம் நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் பல்தேசிய கம்பனிகளில் காணப்படும் வர்த்தக பொறிமுறைகளை விருத்தி செய்வதால் மட்டும் நாட்டின் மொத்த தேசிய உற்பத்திக்கான இலக்குகளை அடைய முடியாது.
சிறு முயற்சியாளர்களை பாதுகாப்பதற்கான சமூக மீள்கட்டுமான பொறிமுறைகள் புதிதாக உருவாக்கப்பட்டால் மட்டுமே இலக்குகளை அடைய முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வர்த்தக மூலாதாரங்களை விருத்தி செய்வதற்கான கட்டமைப்புக்களும் புதிய கண்டுபிடிப்புகளும் எனும் தொனிப்பொருளில் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வர்த்தக பங்களிப்பை மேம்படுத்தவதற்கான புதிய கொள்கைத்திட்டங்களை உருவாக்கவதற்காக தேசிய கலந்துரையாடல் கொழும்பில் அமைந்துள்ள மத்திய வங்கியின் தலைமை செயலகத்தின் இன்று புதன்கிழமை இடம்பெற்றது.
இதன்போது பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM