(ஆர்.விதுஷா றோஜனா) 

கிரிபத்கொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடவத்தை பகுதியில் போதைப் பொருள் கடத்திய சந்தேகத்தின் பேரில் ஒருவரை கிரிபத்கொட போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளதாக கிரிபத்கொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் ஹுணுப்பிட் பகுதியைச் சேர்ந்த மொஹட் றிஸ்வான் நலீம் (வயது 31) என்பவர் ஆவர்.

இவரை கைதுசெய்தபோது இவரிடமிருந்து 21 போதை மருந்துகளையும் 1 கிராம் 370 மில்லிகிராம் நிறையுடைய ஹேரோயின் போதைப் பொருளும் மற்றும் 62 கிராம் 910 மில்லிகிராம் நிறையுடைய ஐஸ் போதைப் பொருளையும் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்த பொலிஸார், அவரை மஹரகம நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கையும் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.