(நா.தனுஜா)

சீனா ஒரு பில்லியன் அமெரிக்க டொலரை கடனாக வழங்கவுள்ளதுடன், அதன் முதற்பாதி இம்மாத இறுதியிலும், எஞ்சிய தொகை ஒக்டோபர் மாதமளவிலும் பெற்றுக்கொள்ளப்படும் என மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்தார்.

மத்திய வங்கியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்ட விடயத்தினைத் தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், 

சீனாவின் மூலோபாயப் பங்குதாரராக இலங்கையைக் கருதுகின்றனர். இலங்கைக்கு பல்வேறு நிதிசார் உதவிகளை வழங்கும் நாடாக சீனா உள்ளது. அந்த அடிப்படையில் சீன அபிவிருத்தி வங்கி 5.25 சதவீத வட்டியுடன் 3 வருட மீள்செலுத்துகைக் காலத்திற்கு இக்கடனை வழங்குகின்றது. ஏனைய சர்வதேச கடன்களை விடவும் சீனாவினால் வழங்கப்படும் கடன்கள் இலாபகரமானதாக உள்ளது என்றார்.