புளத்சிங்கள பகுதியில் 30 மில்லியன் ரூபா பணத்தை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து பேரை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யதுள்ளதாக புளத்சிங்கள பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து 16.59 மில்லியன் ரூபாவையும் 3 இலட்த்து 48 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களையும் மீட்டுள்ளதாகவும் தெரிவித்த புளத்சிங்கள பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.