வாள்வெட்டுக் குழுவை பிணையில் விடுவிக்கும் சயந்தனின் கோரிக்கை நிராகரிப்பு

Published By: Digital Desk 4

06 Aug, 2018 | 02:52 PM
image

வாள்வெட்டில் ஈடுபட்டதாக கூறப்பட்டு யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட இளைஞர்களை விடுவிக்குமாறு சட்­டத்­த­ர­ணி­யும், மாகா­ண­ சபை உறுப்­பி­ன­ரு­மான கே.சயந்­தன் கோரியுள்ளார்.

சாவ­கச்­சே­ரி­யில் நேற்­று­முன் தி­னம் கைது செய்­யப்­பட்ட 7 இளை­ஞர்­க­ளை­யும் 14 நாள்­கள் விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கு­மாறு மல்­லா­கம் நீதிமன்று  நேற்று உத்­த­ர­விட்­டிருந்தது.

7 இளை­ஞர்­களை நேற்­று­முன்­தி­னம் மானிப்­பாய் பொலிஸார் கைது செய்­தி­ருந்­தனர். அத்துடன் அவர்­க­ளி­ட­மி­ருந்து 2 வாள்­கள், ஒரு கோடாரி, ஒரு கைக் கோடாரி, செயின், இரும்­புப் பைப், 3 உந்­து­ரு­ளி­களை மீட்­ட­தா­கப் பொலிஸார் குறிப்­பிட்­ட­னர்.

குறித்த இளைஞர்களை மானிப்­பாய் பொலிஸ் நிலை­யத்­தில் நேற்­றுக் காலை தடுத்து வைத்து விசா­ரணை மேற்­கொண்டனர். இந்நிலையில்  சட்­டத்­த­ர­ணி­யும், மாகா­ண­ சபை உறுப்­பி­ன­ரு­மான கே.சயந்­தன் இளைஞர்கள் சார்பில்  பொலிஸ் நிலை­யத்­தில் முன்­னி­லையா­கி இருந்தார்.

விசா­ர­ணை­க­ளின் பின்­னர் இளை­ஞர்­கள் மல்­லா­கம் நீதி­மன்­றில் நேற்­று­ முற்­ப­டுத்­தப்­பட்­ட­னர். இளை­ஞர்­கள் மீது பொய்க் குற்­றச்­சாட்டு சுமத்­தப்­பட்டு அவர்­கள் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தா­கத் தெரி­வித்த சட்­டத்­த­ரணி சயந்­தன், அவர்­க­ளைப் பிணை­யில் விடு­விக்­கு­மாறு கோரி­யுள்­ளார். எனினும் அவரது பிணைக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு 14 நா­கள் விளக்­க­ம­றிய­லில் வைக்க நீதி­மன்று உத்­த­ர­விட்­டது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19