அர்ச்சனா தற்போது தொலைக்காட்சியில் அதிகம் பிசியாகிவிட்டார். பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ´சரிகமப´ லிட்டில் சாம்ப்ஸ் சீசன் 2 தொகுத்து வழங்கி வருகிறார் அவர்.

அது மட்டுமின்றி பிக் எப் எம் இல் பிக் மேட்னி என்கிற ஷோவை வழங்கிவந்தார். ஆனால் அதில் இருந்து அர்ச்சனா தற்போது விளங்கியுள்ளார்.

அவருக்கு பதிலாக அந்த ஷோவை தற்போது மியூசிக் ஜாக்கி கருண் தொகுத்து வழங்குகிறார்.

ஆர் ஜே வேலையை ஏன் ராஜினாமா செய்தேன் என அர்ச்சனா அளித்துள்ள பேட்டியில் “நான் நடத்தும் டிவி நிகழ்ச்சிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டி இருக்கிறது. புதிது புதிதாக செய்ய வேண்டியது இருக்கிறது. குடும்பத்திற்கும் நேரம்வேண்டும். அதனால் தான் ஆர் ஜே பணியில் நீடிக்க விரும்பவில்லை.. விலகிவிட்டேன்” என கூறியுள்ளார்.