மொபிடெல், LOLC Finance PLC அறிமுகப்படுத்தும் mCash தளத்தின் மூலம் டிஜிட்டல் கடன்

Published By: Priyatharshan

06 Aug, 2018 | 03:13 PM
image

சந்தை தலைமைத்துவத்தை வலுப்படுத்தி மற்றும் அதன் பங்குதாரர் தளத்தை பலப்படுத்தும் மொபிடெல் ஆனது LOLC Finance PLC உடன் இணைந்து இலங்கையில் முதன் முறையாக mCash தளத்தின் மூலம் டிஜிட்டல் கடன்களை வழங்கவுள்ளது.

இது ஒருவரது மொபைல் தொலைபேசியின் மூலம் கடன் வசதியைப் பெற்றுக் கொடுக்கும் ஓர் குறிப்பிடத்தக்கமுன்னெடுப்பாகும். இந்த டிஜிட்டல் லோன் ஆனது வசதி மற்றும் செயற்றிறன் மிகுந்த டிஜிட்டல் நிதித் தீர்வினை எதிர்ப்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு மிகச்சிறந்ததொன்றாகும். 

இந்த டிஜிட்டல் லோன்ஸ் அறிமுகமானது நம் தேசத்தின் நிதிச் சேவைகள் துறையின் வரலாற்றில் முதல் அடியாகும். மொபைல் தொலைபேசியின் மூலம் இலகுவாக கடன் வசதியைப் பெற்றுக் கொள்வதானது உண்மையில் வரலாற்று சிறப்பு மிக்கதொன்றாக அமைகிறது.

புத்தாக்கம்மிக்க மற்றும் நிஜ உலக நிதித் தீர்வுகள் வழங்குவதற்கு புகழ்பெற்ற LOLC Finance PLC, இலங்கையின் வங்கியற்ற நிதிநிறுவனங்களுள் மிகப்பெரியது ஆகும். 

தேசிய மொபைல் சேவை வழங்குனரான மொபிடெல் இன் mCash ஆனது நாட்டின் இலத்திரனியல் கட்டண முறைமைகளில் புரட்சியை ஏற்படுத்தும் அதே சமயம் நிதி உள்ளடக்கத்தையும் விரிவுபடுத்துகிறது.

மொபைல் தொலைபேசியின் உதவியுடன் வாடிக்கையாளர்கள் மேற்கொண்ட பரிமாற்றங்களின் வழிமுறைகளை mCash மாற்றியமைத்தது. கடந்த சில வருடங்களில் mCash மாபெரும் வளர்ச்சியைக் கண்டுள்ளதுடன் மிகப் பெரிய வாடிக்கையாளர்களையும் வளர்ந்து வரும் வாடிக்கையாளர் தளத்தையும் நாடு முழுவதும் தொடர்ந்தும் விரிவுபடுத்தி வருகிறது.

மொபிடெல் இன் பிரதம நிறைவேற்று அதிகாரியான  திரு.நளின் பெரேரா இப்புரட்சிகரமான தயாரிப்பு தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் “மொபிடெல் ஆனது புத்தாக்கம் மிக்க தீர்வுகள் மூலம் பாரம்பரிய பரிவர்த்தனையின் பெருமிபகுதியை இலத்திரனியல் மயமாக்கம் செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அத்துடன் அவர்களது பெறுமதிமிக்க வாடிக்கையாளரின் வாழ்க்கையை மேலும் வசதியாக்கியும் உள்ளது. 

மக்களின் வாழ்வில் நேரம் மிக முக்கியமான விடயம் ஒன்று என்பதனால் ஸ்மார்ட் சாதனங்கள் மூலம் கடன் வசதி பெற்றுக் கொள்ள விண்ணப்பிக்கக்கூடியமை உண்மையில் ஓர் புரட்சிகர முன்னெடுப்பாகும். 

மொபிடெல் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு உற்பத்திகள் மற்றும் சேவைகளை டிஜிட்டல்மயமாக்கல் மூலம் எளிதில் அணுகக்கூடிய வகையில் தீர்வுகளை வழங்குவதில் முன்னோடியாக விளங்குகிறது. 

இது மொபிடெல் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு உற்பத்திகள் மற்றும் சேவைகளை டிஜிட்டல்மயமாக்கல் மூலம் எளிதில் அணுகிட வழங்கிடும் இன்னுமொரு முன்னோடியான தீர்வாகும். 

இவ்வுற்பத்திக்கு எம்முடன் கைகோர்த்தமைக்காக LOLC Finance PLC இனருக்கு நான் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

இலங்கையின் ஒவ்வொருவருக்கும் நிதியியல் உள்ளடக்கத்தை உறுதிப்படுத்தும் எமது பரஸ்பர கனவை இது உள்ளடக்கியது. மொபிடெலின் mCash மற்றும் LOLC Finance இன் நம்பகத்தன்மையினால் எந்தவொரு தனிநபருக்கும் தேவை ஏற்படும் பொழுது டிஜிட்டல் லோன்ஸ் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.”

LOLC Finance PLC இன் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. அஷான் நிசங்க குறிப்பிடுகையில், LOLC Finance PLC ஆனது சந்தையில் முன்னணி வகிக்கும் பெறுமதி சேர்க்கப்பட்ட சேவைகள் உயர் தரமான வாடிக்கையாளர் வசதிகள் மற்றும் பாதுகாப்பும் வழங்குகிறது. 

எமது நோக்கம் உண்மையில் வாடிக்கையாளர் மையப்படுத்தப்பட்ட நிறுவனம் என்பதனை கடன் செயன்முறைகளை எமக்கு இலத்திரனியல்படுத்தும் மற்றும் இலகுபடுத்தும் மொபிடெல் இன் mCash உடன் கூட்டிணைந்து அறிமுகப்படுத்தும் இந்த டிஜிட்டல் லோன் இன் மூலம் மேலும் உறுதிப்படுத்தப்படுகிறது. 

பல வாடிக்கையாளர்களுக்கு மிகவும் விருப்பமான தொடர்பாடல் முறையாக டிஜிட்டல் அடித்தளம் விளங்குகிறது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. அத்துடன் புத்தாக்கமிக்க அறிமுகமான டிஜிட்டல் லோன்ஸ் உடன் வாடிக்கையாளர்களின் சௌகரியத்தை மிக வேகமாக மேம்படுத்துகிறது. 

வரலாற்று சிறப்பு மிக்க இந்த முன்னெடுப்புக்காக mCashஉடன் இணைந்ததையிட்டு நாம் பெருமையடைகிறோம்.”இக்கடன் வசதியைப் பெற்றுக் கொள்ள விண்ணப்பதாரி எந்தவொரு மொபிடெல் இணைப்பிலிருந்தும் #111#  என்ற எண்ணுக்கு டயல் செய்து mCash இன் பதிசெய்யப்பட்ட வாடிக்கையாளராக ஆகிட வேணடும். 

வாடிக்கையாளர் mCashஉடன் பதிவுசெய்துகொள்ளபட்ட பின்னர் கடன் பெற்றுக் கொள்வதற்கான தங்களது தகைமையை அறிந்துகொண்டு mCash  இன் LOLC Finance PLC இடம் கடன் விண்ணப்பம் செய்து கொள்ள முடியும். 

LOLC Finance PLC அனுமதியளித்த கடன்கள் வாடிக்கையாளர்களுக்கு mCash வழியாக வழங்கப்படும். 1000க்கும் மேற்பட்ட கொமர்ஷல் வங்கி அல்லது சம்பத் வங்கி ATM வலையமைப்பு,மொபிடெல் கிளை,SLT  டெலிஷொப் சிங்கர் மெகா,சிங்கர் ப்ளஸ், சிங்கர் ஹோம்ஸ், சிசில் வர்ல்ட் காட்சியறைகள் அல்லது நாடு முழுவதும் உள்ள 16,000க்கும் மேற்பட்ட mCash சில்லறை விற்பனையாளர்களின் mCash கணக்கின் மூலம் பெற்றுக் கொள்ள முடியும். 

அனுமதிக்கப்பட்ட கடன் தொகையின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு அவர்களது பாவனைக் கட்டண பட்டியல்கள் மற்றும் நிறுவனங்களின் கட்டண பட்டியல்களை செலுத்திட ஷொப்பிங் செய்திட முடியும். 

அத்துடன் எந்தவொரு mCash பாவனையாளருக்கும் இக்கடன் தொகையை அனுப்பிடவும் முடியும். 

இச்சேவையின் உச்ச கடன் தொகை ரூபா. 25,000 ஆகும். மேலும் வாடிக்கையாளருக்கு ஆரம்ப கடன் தொகை வழங்கப்படுவதற்கு முன்னர் வாடிக்கையாளர் தேவையான KYC (know your customer) தகவல்களுடன் பதிவு செய்து கொண்டு LOLC Finance PLC இன் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். 

இது இரண்டு வருட காலத்துக்குச் செல்லுபடியாகும் ஒரு முறைக்கான ஒப்பந்தம் ஆகும். இச்சேவையை எந்தவொரு மொபைல் தொலைபேசியிலிருந்தும் (USSD Code) #111# என்ற எண்ணுக்கு டயல் செய்வதன் மூலம் மற்றும் எந்தவொரு Android  சாதனத்திலும் Play Store இலிருந்து Mobitel mCash app  டவுன்லோட் செய்வதன் மூலமும் பெற்றுக் கொள்ள முடியும்.

டிஜிட்டல் லோன்ஸ் தொடர்பாக மேலதிக விபரங்களுக்கு mCash இன் உடனடி அழைப்பு எண்ணுக்கு தொடர்பு கொள்க: 7111 அல்லது www.mCash.lk, www.lolcfinance.com பிரவேசியுங்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right