(ஆர். விதுஷா றோஜனா )

அளுத்கமவிலிருந்து காலி நோக்கி பயணித்த புகையிரதத்துடன் மோதுண்டு 18 வயதுடைய மாணவியொருவர் உயிரிழந்துள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இந்த விபத்து சம்பவமானது நேற்று பிற்பகல் 2.15 மணியளவில் அம்பலாங்கொடை புகையிரத நிலையத்திலிருந்து  ஒரு கிலோ மீட்டர்  தொலைவில் இடம்பெற்றுள்ளது.

புகையிரதத்துடன் மோதுண்டு பலத்த காயங்களுக்குள்ளன துலராணி அமன்தா என்ற மாணவியை பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதித்தபோதும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.