காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு 

Published By: Digital Desk 4

06 Aug, 2018 | 03:10 PM
image

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவை  முன்னிட்டு கொடிச் சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று காலை   கல்வியங்காட்டில்  இடம்பெற்றது.

வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன்  பந்தற்கால் நாட்டுதல் நடைபெற்று பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் மரபுடையவர்களிற்கான காளாஞ்சி  ஒற்றைதிருக்கை மாட்டுவண்டில் மூலம் நல்லூரிலிருந்து கல்வியங்காட்டுக்கு  எடுத்துச் செல்லப்பட்டு கலாச்சார முறைப்படி பெருந்திருவிழாவுக்கான பத்திரிகையும், காளாஞ்சியும் கையளிக்கப்பட்டன.

கொடியேற்றத்துக்கான கொடிச்சீலையானது  சிவஞான முதலியார் பரம்பரையில் கந்தையா தர்மகுலசிங்கம் என்பவரின்  இல்லத்துக்குச் சென்று ஆலயத்தின் பிரதம சிவாச்சாரியர் கையளித்தார்.

ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா  இம்மாதம்  16 ஆம் திகதி வியாழக்கிழமை  காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது .

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இசைக் கருவிகளை இசைப்போருக்கு போட்டி!

2023-09-29 19:16:27
news-image

யாழ். நீர்வேலி அரசகேசரி ஸ்ரீ சித்திவிநாயகர்...

2023-09-29 19:01:17
news-image

கவிஞர் கருணாகரனின் 'எதிர்' நூல் வெளியீட்டு...

2023-09-29 16:42:05
news-image

யாழ் நங்கை 'அன்னலட்சுமி இராஜதுரையின் சிறுகதைகள்'...

2023-09-29 16:38:35
news-image

12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கிடைக்கும் அரிய...

2023-09-29 14:57:05
news-image

சிட்னியில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தியாகதீபம் நினைவு...

2023-09-29 13:38:00
news-image

கொழும்பு தேசிய நூலகத்துக்கு புத்தகங்கள் நன்கொடை 

2023-09-28 17:51:03
news-image

சீரடி சாய் பாபாவின் ஜனன தின...

2023-09-28 17:39:42
news-image

மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு கொழும்பு...

2023-09-28 20:48:23
news-image

யாழில் நெல் விதைப்பு விழா 

2023-09-28 16:37:01
news-image

யாழ். வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய...

2023-09-28 15:07:25
news-image

பொது அதிகார சபைகளால் தகவலறியும் உரிமைக்கான...

2023-09-28 13:20:46