பாகிஸ்தானின் லாகூரில் 5 மணி நேரம் தாமதமாக வீட்டுக்கு வந்த மகள் தாமததிற்கு சரியான காரணத்தை கூறவில்லையென அவரது தந்தை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

கோமல் பீபி என்ற 18 வயது யுவதி சம்பவத்தன்று வீட்டிலிருந்து வெளியே சென்று  5 மணி நேரம் தாமதமாக வீட்டுக்கு வந்துள்ளார். 

இதன்போது தந்தை கோமல் பீபியிடம் தாமதமாக வீடு திரும்பியதற்கான காரணத்தை கேட்டபோது அதற்கு அவர் கூறிய காரணத்தை அவரால் ஏற்றுகொள்ளமுடியாமல்  தனது மகளின் நடத்தையில் சந்தேகம் அடைந்த தந்தை துப்பாக்கியால் மகள் கோமல் பீபியை சுட்டு கொலை செய்துள்ளார். 

தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்த சென்ற பொலிஸார் வருமுன் தந்தை அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். 

பாகிஸ்தானில் குறித்த பெண் கௌரவக் கொலை செய்யப்பட்டிருப்பது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.