யாழ் குடாநாட்டில்  இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் அரச அதிபர் என். வேதநாயகன் கவலை வெளியிட்டுள்ளார்.

யாழ்குடாநாட்டில் நிலவும் அசாதாரண நிலையே இயல்புவாழ்க்கை பாதிக்கப்படுவதற்கான காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் நிகழும் மோசமான சம்பவங்களால் மக்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர் என குறிப்பிட்டுள்ள வேதநாயகன்  இந்நிலையில் உள்ள மக்களை உடனடியாக மீட்கவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்குடாநாட்டில் வாள்கள் கத்திகள் போன்றவற்றை பயன்படுத்தி; மக்களை அச்சப்படுத்தும் நடவடிக்கையில் பல்வேறு குழுக்கள் ஈடுபட்டுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் சுதந்திரமாக வாழமுடியாமல் தேவையற்ற அச்சத்தில் சிக்குண்டுள்ளனர் என  தெரிவித்துள்ள அரசாங்க அதிபர் சிவில் பாதுகாப்பு குழுவினர் இந்த நிலையை முடிவிற்கு கொண்டுவருவதற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.