இந்தியா உடனான 2 வது டெஸ்ட் போட்டியிலிருந்து இங்கிலாந்து அணி வீரர் பென் ஸ்டொக்ஸ் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். 

இந்தியா உடனான 2-வது டெஸ்ட் போட்டி விளையாடவுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. 

குறித்த போட்டி எதிர்வரும் 9 ஆம் திகதி லண்டனின் லோட்ஸ் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

முதலாவது டெஸ்ட் போட்டியின் போது துடுப்பாட்டத்தில் சோபிக்க தவறிய டேவிட் மலன் நீக்கப்பட்டார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு மதுபான விடுதி ஒன்றில் வாலிபரை தாக்கிய வழக்கு விசாரணையை  பென்ஸ்டொக்ஸ் இந்த வாரம் எதிர்கொள்ள வேண்டியுள்ளதால் அவரும் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அவர்களுக்கு பதிலாக புதுமுக வீரர் 20 வயதான ஆலி போப் மற்றும் கிறிஸ் வோக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளனர்.