காமெடி மற்றும் கமர்சியல் கலாட்ட படம் “எவன்டா“

Published By: Robert

02 Mar, 2016 | 02:05 PM
image

“செல்வந்தன், புருஸ்லீ - 2 வெற்றிப் படங்களை  தொடர்ந்து   சுவாதி, ஹர்ஷினி வழங்கும்  பத்ரகாளி பிலிம்ஸ் பிரசாத் தயாரிக்கும் படம் “எவன்டா“ தெலுங்கில் “பழுப்பு“ என்ற பெயரில் வெளியாகி ஹிட்டான படமே தமிழில் “எவன்டா “ என்ற பெயரில் வெளியாகிறது.

இந்த படத்தில் ரவிதேஜா நாயகனாக நடிக்கிறார். நாயகிகளாக ஸ்ருதிஹாசன், அஞ்சலி ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் ராய் லட்சுமி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார், பிரகாஷ்ராஜ், நாசர், பிரம்மானந்தா, ஜெய் ஜெயபிரகாஷ், ஆதித்யா மேனன், பரமாஜி ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு - வின்சென்ட் / இசை - எஸ்.எஸ்.தமன் 

பாடல்கள் - அருண்பாரதி, திருமலை சோமு, வடிவரசு, மீனாட்சி சுந்தரம். 

கதை - கோனா வெங்கட், கே.எஸ்.ரவீந்திரா 

நடனம் - ராஜுசுந்தரம், பிருந்தா, சேகர்  /  கலை   - ஏ.எஸ்.பிரகாஷ்

திரைக்கதை, இயக்கம் - கோபிசந்த்      

இணைத் தயாரிப்பு - வெங்கட்ராவ், சத்ய சீத்தாலா

தயாரிப்பு - பத்ரகாளி பிரசாத்

வசனம், தமிழ் உருவாக்கம் - ARK.ராஜராஜா 

படம் பற்றி தமிழ் உருவாக்கம் செய்திருக்கும் A.R.K.ராஜராஜாவிடம் கேட்டோம்...

இந்த படம் காமெடி கலந்த கமர்ஷியல் படம். ரவி தேஜா படம் என்றாலே  காமெடிக்கு பஞ்சமிருக்காது. அது போல் இந்த படத்திலும் காமெடி கலாட்டா செய்திருக்கிறார்.

படத்தில் ஐந்து சண்டைக் காட்சிகள் இருக்கிறது ஒவ்வொரு சண்டைக் காட்சிகளும் ஒவ்வொரு விதமாக இருக்கும். தமனின் இசை அனைத்து படங்களுக்கும் ஸ்பெஷலாக இருக்கும். தெலுங்கில் தமனை இசையமைப்பாளராக அறிமுகப் படித்தியவர் ரவி தேஜா தான் அதனால் இந்த படத்திற்கு கூடுதல் ஸ்பெஷல் இருக்கும்.

இந்த படம்தான் ஸ்ருதிஹாசனுக்கு தெலுங்கில் மெகா ஹிட் படம். நடிகை அஞ்சலிக்கும் மிகப்பெரிய பலமாக இருந்ததும் இந்த படம்தான். படம் இம்மாதம் 12 ஆம் திகதி வெளியாக உள்ளது என்றார் ARK.ராஜராஜா

தகவல் : சென்னை அலுவலகம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏப்ரலில் வெளியாகும் சுந்தர் சி யின்...

2024-03-27 15:40:07
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மையப்படுத்தி உருவாகும்...

2024-03-27 21:28:48
news-image

'குளோபல் ஸ்டார்' ராம்சரண்நடிக்கும் 'கேம் சேஞ்சர்'...

2024-03-27 21:28:27
news-image

எடிசன் விருது விழா : சிறந்த...

2024-03-27 15:25:27
news-image

ஜெயம் ரவி நடிக்கும் 'ஜீனி' திரைப்படத்தின்...

2024-03-26 17:27:01
news-image

மனைவியை ஒருதலையாக காதலிக்கும் கணவனாக விஜய்...

2024-03-26 19:26:29
news-image

தேஜ் சரண்ராஜ் நடிக்கும் 'வல்லவன் வகுத்ததடா'...

2024-03-26 17:10:13
news-image

ரசிகரை நடிகராக்கிய உலகநாயகன்

2024-03-26 16:49:17
news-image

வெற்றிக்காக 'ஜீனி'யாக நடிக்கும் ஜெயம் ரவி

2024-03-25 21:19:56
news-image

'கொல்லுறாளே கொள்ளை அழகுல ஒருத்தி..'

2024-03-25 17:28:41
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2024-03-25 17:29:35
news-image

கல்லூரி மாணவர்களை நம்பிய சந்தானம் படக்...

2024-03-25 17:19:37