சிரியாவின் சுவைடா மாகாணத்தில் இருந்து கடத்தி செல்லப்பட்டவர்களில் 19 வயது மாணவனை ஐ.எஸ். தீவிரவாதிகள் கொலை செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன

சிரியாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள சுவைடா மாகாணத்துக்குட்பட்ட பல பகுதிகளுக்குள் கடந்த மாதம் 25 ஆம் திகதி நுழைந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் சுமார் 300 பேர் கொல்லப்பட்டனர்.

பெண்கள் உள்பட 30 க்கும் அதிகமானவர்களை அவர்கள் பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். பிடிபட்ட பெண்களை உயிருடன் எரித்துக்கொல்லப் போவதாக ஐ.எஸ். தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்திருந்தனர்.

பிணைக்கைதிகளை விடுவிக்க அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திவரும் நிலையில், கடத்திச் செல்லப்பட்டவர்களில் முஹன்னட் தவுக்கான் அபு அம்மர் என்னும் 19 வயது மாணவனை கொன்றுவிட்ட தீவிரவாதிகள் அவரது சடலத்தின் படங்களை அவர்களது இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்