(எம்.சி. நஜிமுதீன்)

2030 ஆம் ஆண்டளவில் நிலையான அபிவிருத்தி இலக்கை அடைந்து கொள்ளல் எனும் தொனிப்பொருளில் தயாரிக்கப்பட்ட “நிலையன தேசிய அபிவிருத்தி கொள்கைத்திட்ட” முன்மொழிவு நாளை பி.ப. 3.00 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வெளியிடப்படவுள்ளது. 

பொருளாதாரம், சமூகம் மற்றும் சுற்றாடல்  ஆகிய துறைகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இக்கொள்கைத்திட்ட வெளியீட்டு நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர்கள் கலந்துகொள்ளவுள்ளதுடன் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட அதிகளவான பிரமுகர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.