ஐ.நா,வின் தடைக்கு பின்­னரும் வட கொரியா, அணு ஆயுதம் மற்றும் ஏவு­கணைத் தயா­ரிப்பு திட்­டங்­களை நிறுத்­த­வில்லை என ஐ.நா., பாது­காப்பு கவுன்ஸில் தெரி­விக்­கி­றது.

சட்­டத்­துக்கு புறம்­பான வகையில் கப்பல் வழி­யாக எண்ணெய்ப் பொருட்­களை கைமாற்­று­வது மற்றும் அயல்­நாடு­க­ளுக்கு ஆயு­தங்கள் விற்­பனை செய்ய முயல்­வது போன்­ற­வற்றில் வட­கொ­ரியா ஈடு­ப­டு­வது மிகப்­பெ­ரிய அளவில் அதி­க­ரித்­துள்­ள­தாக அந்த அறிக்கை கூறு­கி­றது. 

அணு ஆயு­த­மற்ற பிராந்­தி­ய­மாக மாற்­று­வது குறித்து அமெ­ரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் அதி­கா­ரி­க­ளிடம் ஜூன் மாதம் வட­கொ­ரியா உறு­தி­ய­ளித்­தி­ருந்த போதிலும் புதிய பெலிஸ்டிக் ஏவு­கணை ஒன்றை கட்­ட­மைத்து வரு­கி­றது என அமெ­ரிக்க அதி­கா­ரிகள் கடந்த வாரம் தெரி­வித்­தி­ருந்­தனர்.

உளவு பார்க்கும் செயற்­கைக்கோள் மூலம் வட­கொ­ரி­யாவின் அணு ஆயுத தயா­ரிப்புத் தளத்தில் தொடர் செயல்­பா­டுகள் நடந்து வரு­வதும் பெலிஸ்டிக் ஏவு­க­ணை­களை தயா­ரித்து வரு­வதும் தெரி­ய­வந்­துள்­ள­தாக பெயர்­வெ­ளி­யி­டாத அமெ­ரிக்க அதி­கா­ரிகள் வாஷிங்டன் போஸ்ட்­டுக்கு தெரி­வித்­துள்­ளனர்.

கடந்த ஜூன் மாதம் ஜனா­தி­பதி ட்ரம்ப் மற்றும் வட­கொ­ரிய தலைவர் கிம் ஜாங்-உன் சிங்­கப்­பூரில் சந்­தித்­தனர். அதில் அணு ஆயுத ஒழிப்பு குறித்த வேலை­களில் ஈடு­ப­வ­தற்கு இரு தலை­வர்­களும் உறு­தி­ய­ளித்­தனர். 

ஆனால் எப்­படி அது நிகழும், என்ன மாதி­ரி­யான செயல்­மு­றைகள் செயல்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளன என அதில் குறிப்­பி­ட­வில்லை.

அணு ஆயுத திட்­டங்கள் மற்றும் ஏவு­கணைச் சோத­னை­களில் ஈடு­ப­டு­வ­தற்கு எதி­ரான அமெ­ரிக்கா மற்றும் சர்­வ­தேச தடைகள் உள்­ளிட்­ட­வற்றை சந்­தித்து வரு­கி­றது வட­கொ­ரியா.

''வட­கொ­ரியா தனது அணு ஆயுத மற்றும் ஏவு­கணைத் திட்­டங்­களை நிறுத்­த­வில்லை மேலும் பாது­காப்பு அமைப்பின் தீர்­மா­னங்­களை மீறி சட்­டத்­துக்கு புறம்­பான வகையில் கப்பல் வழியாக பெற்றோலிய பொருட்களை கைமாற்றும் செயல் மற்றும் கடலில் நிலக்கரி கைமாற்றம் ஆகியவை 2018இல் மிகப்பெரிய அளவில் அதிகரித்து வருகிறது'' என்கிறது அந்த அறிக்கை.