குளவிக் கொட்டுக்கிலக்காகி பதவிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் குணமடைந்து இன்றைய தினம் இடம்பெறவுள்ள தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு முகங்கொடுப்பதற்காக வைத்தியசாலையிலிருந்து சிகிச்ச‍ை பெற்று வெளியேறியுள்ளனர்.

நேற்றைய தினம் வழிபாட்டுக்காக அனுராதபுரம் பதவிய பகுதியில் அமைந்துள்ள விகாரையொன்றுக்கு சென்ற தரம் ஐந்து மாணவர்கள் 40 பேர் உட்பட 78 பேரும் குளவிக் கொட்டு தாக்குதலுக்கிலக்காகி பதவிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந் நிலையில் இன்று புலமைப்பரிசில் பரீட்சை நாள் என்பதனால் குளவிக் கொட்டு தாக்குதலுக்கிலக்கான மாணவர்களக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வைத்தியர்கள் அவர்களை வைத்தியசாலையிலிருந்து செல்ல அனுமதித்துள்ளனர்.