மொனராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கும்புக்கன பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் எட்டு வயது சிறுமி உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளதாக மொனராகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

மொனராகலை ‍- வெல்லவாய வீதியில் லொறியொன்றும் முச்சக்கர வண்டியொன்றும் மோதியதனாலேயே குறித்த இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

அத்துடன் இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மொனராகலை பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.