வலி கிழக்கில் மக்கள் பங்கேற்புடன் சிரமதானம்

Published By: Digital Desk 4

05 Aug, 2018 | 12:37 AM
image

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை சனசமூக நிலையங்களை இணைந்து சிரமதான முயற்சிகளை கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பித்துள்ளது. 

அந்த வகையில் முதற்கட்டமாக புத்தூர் கலைமதி சனசமூக நிலையத்தின் சுகாதாரக் குழுவுடன் இணைந்து சுன்னாகம் - புத்தூர் வீதியின் இருமருங்கிலும் காணப்படும் பற்றைகளை சிரமதானப் பணிகள் மூலம் துப்புரவு செய்யப்பட்டுள்ளன.

வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் மற்றும் கலைமதி சனசமூக நிலையத்தின் சுகாதாரக்குழு உறுப்பினர்கள், பிரதேச சபையின் உறுப்பினர்கள், வெளிவாரி பணியாளர்கள் ஆகியோர் இச் சிரமதான முயற்சிகளில் பங்கேற்றனர்;. 

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் கடந்த அமர்வில் வீதிகளின் இருமருங்கிலும் துப்புரவு, மற்றம் பாதீனிய செடி ஒழிப்புத் தொடர்பில் பிரதேச சபை உறுப்பினர் இராமநாதன் ஐங்கரனினால் கேள்வி எழுப்பபப்பட்டது. 

இவ் வினாவிற்குப் பதிலளித்த தவிசாளர் 'வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையானது யாழில் காணப்படும் ஏனைய பிரதேச சபைகளைக் காட்டிலும் மூன்று மடங்கு நிலப்பரப்பினைக் கொண்டுள்ளது. அவ்வாறு காணப்படும் பல பகுதிகளின் வீதியோரங்கள் தனியே பிரதேச சபையின் மட்டுப்படுத்தப்பட்ட ஆளணி மற்றும் வளங்களுடன்  துப்புரவு செய்யப்பட முடியாத நிலை காணப்படுகின்றது. 

இந் நிலையில் நாம் சனசமூக நிலையங்களை உள்வாங்கி மக்கள் பங்கேற்புடனான சிரமதானத்தினை முன்னெடுப்பதற்கு ஏற்பாடுகள் செய்வதாக' உத்தரவாதமளித்திருந்தார்.

இச் சபை அமைந்த பின்னர் சில உறுப்பினர்கள் ஏற்கனவே சிரமதான முயற்சிகளுக்கு கோரிக்கை விடுத்த நிலையில் அவை மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்துடன் பிரதேச சபையின் வெளிவாரி பணியாளர்கள் தினமும் ஏதோ ஒருபகுதியைச் சுத்தம் செய்துவருகின்றனர். 

சுமார் 104 சதுரக் கிலோ மீற்றருக்கு மேற்பட்ட நிலப்பரப்பில் சபை உறுப்பினர்கள் மேலும் சிரமதானங்களை ஒழுங்கமைக்கும் பட்சத்தில் அதனை தான் வரவேற்பதுடன் அதற்கான ஏற்பாடுகளையும் செய்து தருவதாக தவிசாளர் கேட்டுக்கொண்டார்.

இதனடிப்படையில் கதிர்த்திகேசு கதிர்காமநாதன் தன்னுடைய ஒழுங்கமைப்பின் கீழ் கலைமதி சனசமூக நிலையத்தின் கீழ் இயங்கும் சுகாதாரக்குழுவினர் முன்னுதாரணமாக புத்தூர் சுன்னாகம் வீதிப்பகுதியில் சிரமதானத்தினைச் செய்ய முன்வருவதாக சபையில் விருப்பம் தெரிவித்திருந்தார். 

இவ்வாறாக மக்கள் பங்கேற்புடன் சிரமதான முயற்சிகள் இடம்பெறுவதை பலரும் வரவேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

6 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள்...

2025-03-19 11:55:55
news-image

பராமரிப்பற்ற நிலையில் வவுனியா புதிய பேருந்து...

2025-03-19 11:48:53
news-image

ஏறாவூர் பகுதியில் ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் ஆலயம்...

2025-03-19 11:10:32
news-image

புதிதாக சிந்திப்போம், புதுமை காண்போம் வழிகாட்டல்...

2025-03-19 11:07:05
news-image

நகை கடையிலிருந்து தங்கச் சங்கிலிகளை திருடிச்...

2025-03-19 11:12:28
news-image

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 11,081 குடும்பங்களுக்கு காணிகள்...

2025-03-19 11:09:33
news-image

வீட்டிலிருந்த அங்கவீனரை கொலை செய்து பெறுமதியான...

2025-03-19 11:37:11
news-image

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக...

2025-03-19 10:08:17
news-image

பா. உ. அர்ச்சுனாவால் தேசிய நல்லிணக்கத்திற்கு...

2025-03-19 10:59:36
news-image

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து...

2025-03-19 09:23:29
news-image

இராமேஸ்வரம் மீனவர்கள் மூவர் இலங்கை கடற்படையால்...

2025-03-19 11:35:02
news-image

தகவல் தொழில்நுட்ப சேவைகள் ஏற்றுமதி துறைக்கு...

2025-03-19 09:25:20