இந்தியாவிற்கு எதிரான முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து அணி 31 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

எட்ஜ்பஸ்டனில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவதற்கு 194 ஓட்டங்கள் பெறவேண்டிய நிலையில்  ஆடிய இந்திய அணி 162 ஓட்;டங்களிற்கு தனது சகல விக்கெட்களையும் இழந்தது.

இந்திய அணியின் மிகப்பெரும் நம்பிக்கையாக காணப்பட்ட அணித்தலைவர் விராட்கோலி 51 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் பென்ஸ்டோக்சின் பந்து வீச்சில் எல்.பி.டபில்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

அதே ஓவரிலேயே ஸ்டோக்ஸ் சமியை வெளியேற்றினார்

பின்னர் இசாந் சர்மா ரசீத்தின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

இறுதிவரை நின்று போராடிய பன்ட்யா 31 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் ஸ்டோக்சின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்

இங்கிலாந்து அணி சார்பில் பென்ஸ்டோக்ஸ் நான்கு விக்கெட்களை வீழ்த்தினார்.