பாடசாலைகளில் பாலியல் விழிப்புணர்வு கல்விக்கு எதிர்ப்பு

Published By: Daya

04 Aug, 2018 | 01:22 PM
image

பாடசாலைகளில் பாலியல் விழிப்புணர்வு கல்வி வழங்க பெற்றோரும், பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

பாலியல் குற்றங்கள் பெருகி வருவதால், பாடசாலை குழந்தைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பாலியல் விழிப்புணர்வு கல்வி வழங்குவது குறித்தும், பொது இடங்களில் கண்காணிப்பு கெமராக்கள் பொருத்துவதற்கு எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து குறித்த வழக்கில் தமிழக அரசுத் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. தமிழக உள்துறைச் செயலாளர், டிஜிபி சார்பில் உதவி ஐ.ஜி.மகேஸ்வரன், நீதிபதி கிருபாகரன் முன் ஆஜராகி பதிலளித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது

“பாடசாலைகளில் பாலியல் விழிப்புணர்வு கல்வி வழங்குவதற்கு பெற்றோரும், பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் இதற்கு மாற்றாக, குழந்தைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

இதுதவிர, 32 மாவட்டங்களிலும், 10 மண்டலங்களில் மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்குவதற்கு நடமாடும் ஆலோசனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்கள் மூலம், 2014-15 இல் 3 இலட்சத்து 47 ஆயிரம் மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. 2015 -16 இல் 3 இலட்சத்து 83 ஆயிரம் மாணவர்களுக்கும், 2016-17 இல் 2 இலட்சத்து 31 ஆயிரம் மாணவர்களுக்கும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

கண்காணிப்பு கெமரா விவகாரத்தில், அரசு மற்றும் வர்த்தக கட்டடங்களில் கண்காணிப்பு கெமராக்கள் பொருத்துவதைக் கட்டாயமாக்கி, 2012 டிசம்பரில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, தமிழகம் முழுவதும் 87 ஆயிரத்து 743 அரசு மற்றும் வர்த்தக கட்டடங்களில் கண்காணிப்பு கெமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.''

இவ்வாறு பதில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47