கிளிநொச்சியில் அமைந்துள்ள யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட பொறியியல் பீட மற்றும் மாணவர்கள் விடுதி ஆகிய கட்டடத்தொகுதிகளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வமாக இன்று திறந்து வைத்துள்ளார். 

கிளிநொச்சியில் அமைந்துள்ள யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட  பொறியியல் பீட  மற்றும் மாணவர்கள் விடுதி ஆகிய கட்டடத்தொகுதிகளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வமாக இன்று திறந்து வைத்தார்.

இன்று கிளிநொச்சிக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் சுமார் இரண்டாயிரத்து நூறு மில்லியன் ரூபா செலவில் பொறியில் பீடத்திற்காக  நிர்மாணிக்கப்பட்ட பத்துக்கட்டடங்களையும்.

 ஆண், பெண் மாணவர்களுக்கான விடுதித் தொகுதிகள் விரிவுரையாளர்களுக்கான அலுவலகம் என்பவற்றை  இன்று காலை 11.00 மணிக்குத்திறந்துவைத்துள்ளார். 

இதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான விஜயகலா மகேஸ்வரன்,  சித்தாத்தன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்கள், பல்கலைக்கழக விரைவுரையாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும விசேட அதிதகள் என பலர் கலந்து கொண்டனர்.