வாள்வெட்டுக் கும்பல் தப்பி சென்ற கார் மீட்பு; ஒருவர் கைது

Published By: Digital Desk 4

04 Aug, 2018 | 09:00 AM
image

மிருசுவில் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்ட வாள்வெட்டுக் கும்பல் தப்பித்துச் சென்ற கார் மீட்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் வந்த வாள்வெட்டுக் கும்பல் அடாவடியில் ஈடுபட்டு தப்பித்த போது, அந்தப் பகுதியைச் சேரந்த இளைஞர்கள் துரத்திச் சென்றனர். எனினும் கும்பல் ஓடித் தப்பித்தது.

கும்பல் பயணித்த காரின் சக்கரம் ஒன்று காற்றுப் போனதால் அதனை வீதியில் கைவிட்டு கும்பல் தப்பித்தது. இந்த நிலையிலேயே காரை கொடிகாமம் பொலிஸார். மீட்கப்பட்டுள்ளனர்.

மிருசுவில் வடக்கு வீதியில் உள்ள தம்பு ஜெயானந்தம் என்பவரது வீட்டுக்குள் வாள்கள் பொல்லுகளுடன் பத்துக்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பல் நேற்று முந்தினம் புகுந்தது.

வீட்டில் இருந்தவர்களையும் அயல் வீட்டில் வசித்தவர்களையும் சரமாரியாக கும்பல் தாக்கியது.

அப்போது அயலில் உள்ளவர்கள் கூக்குரல் இட்டதுடன் கிராம மக்கள் திரட்டனர். அதனால் கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் கும்கல் தப்பி ஓடியது. மக்கள் கும்பலை விரட்டிச்சென்றனர்.

வீதியில் உழவு இயந்திரத்தில் பயணித்த பாலேந்திரன் றஜீபன் என்பவரையும் அந்தக் கும்பல் தாக்கியது. அவரது உழவு இயந்திரத்தையும் சேதமாக்கிவிட்டு கும்பல் தப்பித்தது.

மிருசுவில் பகுதி இளைஞர்கள் கொடிகாம பொலிஸாருடன் இணைந்து அந்தக் கும்பலை விரட்டிச்சென்றனர்.

இதன்போது கும்பலைச் சேர்ந்த சிலர் பயணித்த காரினுடைய சக்கரம் ஒன்று காற்றுப்போனதனால் அதனைக் கைவிட்டுவிட்டு அதில் பயணித்தோர் தப்பிச்சென்றுவிட்டனர்.

கார் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டு கொடிகாமம் பொலிஸ் நிலையத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது.

அந்தக் காரினுடைய உரிமையாளர் சாவகச்சேரி சரசாலை வடக்கைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டார்.

கார் வாடகைக்கு கொடுக்கப்பட்டதாக உரிமையாளரினால் தெரிவிக்கப்பட்டது.

இதனடிப்படையில் நேற்று அதிகாலை கொடிகாமம் பொலிஸாரினால் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த வன்முறைச் சம்பவத்தில் மிருசுவில் வடக்கு வீதியைச் சேர்ந்த 57 வயதான தம்பு ஜெயானந்தன் படுகாயமுற்றநிலையில் யாழ்போதனா வைத்தியசாலையிலும், மிருசுவிலை ஆயத்தடியைச் சேர்ந்த 23 வயதான பாலேந்திரன் றஜீபன் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 11:50:02
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18