"பொலிஸ் அதிகாரத்தை கோரும் தார்மீகம் சி.வி.க்கு இல்லை"

Published By: Vishnu

03 Aug, 2018 | 07:15 PM
image

(எம்.சி.நஜிமுதீன்)

வடக்கு முதலமைச்சருக்குள்ள அதிகாரத்தைக் கொண்டு அங்கு அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள முடியாத சி.வி. விக்னேஸ்வரன், பொலிஸ் அதிகாரம் கோருவது தார்மீகமற்ற செயலாகும் என கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு மாகாணத்துக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கப்படுமாயின் வடக்கில் இடம்பெறறும் குற்றச் செயல்களை இருவார காலப் பகுதிக்குள் முடிவுக்கு கொண்டு வருவேன் என வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

அவ்வாறெனின் அவரால் கட்டுப்படுத்த கூடியதான குழுவொன்றை அங்கு செயற்படுகின்றமை தெளிவாகின்றது. அத்துடன் இராணுவ முகாம்களை அகற்றுவதற்கும் அவர் பொலிஸ் அதிகாரத்தினை கோருகின்றார். எனவே அவர் கோரும் பொலிஸ் அதிகாரத்தில் எத்தரப்பினரை கட்டுப்படுத்த உள்ளார் என்ற சந்தேகம் எமக்குள்ளது. 

மேலும் முதலமைச்சருக்குள்ள அதிகாரத்தைக் கொண்டு செய்யவேண்டிய பல வேலைத்திட்டங்கள் இருக்கின்றபோதும் அதனை செய்ய  முடியாத முதலமைச்சர் மேலதிக அதிகாரம் கோருவது தார்மீகமற்ற செயலாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59
news-image

மாஓயாவில் நீராட சென்ற 4 மாணவர்கள்...

2024-03-28 09:50:11