பின்லேடனின் வாழ்க்கை எப்போது மாறியது? முதல்முறையாக மனம் திறந்தார் தாயார்

Published By: Rajeeban

03 Aug, 2018 | 04:09 PM
image

எனது மகன் ஒரு ஜிகாத் தீவிரவாதியாக மாறுவான் என நான் ஒரு போதும் நினைத்ததில்லை என ஒசாமா பின் லேடனின் தாயார் ஆலியா கெனம்  ( Alia Ghanem) தெரிவித்துள்ளார்

பல வருடகால மௌனத்திற்கு பின்னர் ஒசாமா பின் லேடன் குடும்பத்தினர்  முதல்முறையாக கார்டியனிற்கு செவ்வியொன்றை வழங்கியுள்ளனர்

ஒசாமா பின் லேடனின் தாயார் அவரர் சகோதாரர்கள் தங்கள் எண்ணவோட்டங்களை பகிர்ந்துகொண்டுள்ளனர்.

அதன் போதே ஒசாமா பின் லேடனின் தாயார்  தனது மகன் ஜிகாத் தீவிரவாதியாக மாறுவான் என ஒரு போதும் கருதவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

ஒசாமா பின் லேடனின் தாயார் அந்த செவ்வியில் தெரிவித்துள்ளதாவது:

எனது மகன் வெகுதொலைவில் இருந்ததால் எனது வாழ்க்கை மிகுந்த துயரமானதாக காணப்பட்டது.

எனது மகன் மிக நல்ல சிறுவன் அவன் என்னை மிகவும் நேசித்தான்.

அவன் அமைதியான ஆனால் புத்திசாலித்தனமான சிறுவனாக விளங்கினான்,

20 வயதிற்கு பின்னரே எனது மகன் மாறத்தொடங்கினான், அதன் பின்னர் அவன் வலுவான , மதம் பற்றி சிந்தனையுடையவனாக மாறினான்.

ஜெட்டா பல்கலைகழகத்தில் பொருளாதாரம் படித்துக்கொண்டவேளை அவன் தீவிரவாதமயப்படுத்தப்பட்டான், பல்கலைகழகத்தில் இருந்தவர்கள் எனது மகனை மாற்றினார்கள், அதன் பிறகு எனது மகன் முற்றிலும் வித்தியாசமான மனிதாகமாறினான்.

பல்கலைகழகத்தில் எனது மகன் சந்தித்த அப்துல்லா அசாம் என்பவரே பின்னர் எனது மகனின் ஆன்மீக குருவாக மாறினார்.

அவன் தனது 20 வயதில் சிலரை சந்திக்கும் வரை நல்லவனாகயிருந்தான் அவர்கள் அவனை மூளைசலவை செய்தனர்.

நான் எனது மகனை அவர்களிடமிருந்து விலகியிருக்குமாறு கேட்டுக்கொண்டேன் ஆனால் என் மகன் என் மேல் இருந்த பாசம் காரணமாக தான் செய்வது எதனையும் எனக்கு தெரிவிப்பதில்லை.

எனது மகன் குடும்ப வர்த்தகம் என்ற பெயரில் ஆப்கானிஸ்தானிற்குள் நுழைந்து தன்னிடமிருந்த பணம் அனைத்தையும் செலவிட்டான்,

ஆனால் எனது மகன் ஒரு ஜிகாத்போராளியாக மாறுவான் என நான் நினைத்ததில்லை.

ஆனால் அதனை அறிந்தவேளை நாங்கள் மிகவும் வேதனைப்பட்டோம்.நான் இவை எவையும் நடக்க கூடாது என விரும்பினேன்,

1999 இல் இறுதியாக எனது மகனை நான் பார்த்தேன்,ஆப்கானிஸ்தானின் கந்தகாரிற்கு வெளியே உள்ள இடத்தில் நாங்கள் மகனை பார்த்தோம்.ரஸ்ய படையினரிடமிருந்து அவர்கள் கைப்பற்றிய விமானநிலையத்திற்கு அருகில் அப்பகுதி காணப்பட்டது.

எங்களை பார்த்து மகன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான்,ஒவ்வொரு இடமாக சுற்றிக்காட்டினான் விலங்குகளை வேட்டையாடி எங்களிற்கு விருந்து வைத்தான் என ஒசாமா பின் லேடனின் தாயார் தெரிவித்துள்ளார்.

1980 களின் ஆரம்பத்தில் ஒசாமா ரஸ்ய படையினருக்கு எதிராக போராடுவதற்காக ஆப்கானிஸ்தான் சென்றார் என்கின்றார் அவரது சகோதரர் ஹசன், ஆரம்ப காலத்தில் அவரை அனைவரும் மதித்தனர்,நாங்கள் அவர் குறித்து பெருமிதம் கொண்டிருந்தோம் சவுதி அரேபிய அரசாங்கம் கூட அவரை கௌரவமாக நடத்தியது பின்னர் அவர் ஜிகாத் தீவிரவாதியானார் என ஹசன் தெரிவிக்கின்றார்.

என்னுடைய மூத்த சகோதரன் என்ற வகையில் அவர் குறித்து நான் மிகவும் பெருமிதம் அடைகின்றேன்,அவர் எனக்கு பல விடயங்களை கற்றுத்தந்தார் ஆனால் ஒரு மனிதனாக அவர் குறித்து நான் பெருமிதம் கொள்ளவில்லை அவர் உலகின் மிகப்பெரும் பிரபலத்தை பெற்றார் ஆனால் அதனால் எந்த பயனுமில்லை எனவும் சகோதரர் குறிப்பிடுகின்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52