சட்டவிரோதமான முறையில்  தங்க பிஸ்கட்களை   இலங்கைக்கு கடத்திவர  முயன்ற இந்திய பிரஜை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் இன்று அதிகாலை டுபாயிலிருந்து சென்னை ஊடாக இலங்கை  கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்து  வெளியேறும் போது குறித்த நபரின் பயண  பொதியில் மறைந்து வைக்கப்பட்டிருந்த  தங்க பிஸ்கட்களுடன், ஒரு தொகை தங்க நகைகளையும் சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்   இந்தியாவின் கேரளா பிரதேசத்தை சேர்ந்த 44 வயதான மொழிபெயர்ப்பாளர் என சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறித்த நபரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த விமான நிலைய சுங்க அதிகாரிகள் அவரை சேதனையிட்டபோது   சுமார் 16 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கங்களையும், தங்க பிஸ்கட்டுகளையும்  இலங்கைக்குள் கொண்டுவர முயற்சித்த வேளை குறித்த நபர் கட்டுநாயக்க  சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த நபரை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டபோது அவரிடமிருந்து சுமார்  16 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்களுடன், ஒரு தொகை தங்க நகைகளையும் மீட்டுள்ளனர். 

சுமார் 2 கிலோ  514.14 கிராம் மதிக்கதக்க  தங்கங்களை மறைத்து வைத்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தார். 

கைதுசெய்யப்பட்டவரிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.