ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி இந்­தி­யா­விடம் தோல்­வியைத் தழு­விக்­கொண்­டது. அதே­வேளை இந்­திய அணி இறுதிப் போட்­டியில் விளை­யாடும் வாய்ப்பை உறு­திப்­ப­டுத்­திக்­கொண்­டது.

பங்­க­ளாதேஷ் மிர்பூர் மைதா­னத்தில் நடை­பெற்ற 7ஆவது லீக் போட்­டியில் இலங்கை மற்றும் இந்­திய அணிகள் பலப்­ப­ரீட்சை நடத்­தின. இந்தப் போட்­டியில் நாணய சுழற்­சியில் வெற்­றி­பெற்ற இந்­திய அணி, இலங்­கையை முதலில் துடுப்­பெ­டுத்­தாட அழைத்­தது.

அதன்­படி முதலில் கள­மி­றங்­கிய இலங்கை அணி நிர்­ண­யிக்­கப்­பட்ட 20 ஓவர்­களில் 9 விக்­கெட்­டுக்­களை இழந்து 138 ஓட்­டங்­களை மாத்­தி­ரமே பெற்றது.

ஆரம்பத் துடுப்­பாட்ட வீரர்­க­ளாக இலங்கை அணியின் சந்­திமால் மற்றும் அனு­பவ வீரர் தில்ஷான் ஆகியோர் கள­மி­றங்­கினர். பவர் பிளே ஓவர்­களில் அடித்து ஆட முற்­பட்டு இலங்கை அணியின் முதல் வரிசை வீரர்கள் அடுத்­த­டுத்து விக்­கெட்­டுக்­களை பறி­கொ­டுத்­தனர்.

இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்­கெட்­டு­களை இழந்து 138 ஓட்­டங்­களைக் குவித்­தது. கபு­கெ­தர 30 ஓட்­டங்­க­ளையும், சிறி­வர்­தன 22 ஓட்­டங்­க­ளையும் குவித்­தனர். மெத்­தியூஸ் (18), தில்ஷான்(18), திசர பெரேரா 17 ஓட்­டங்கள் வீதம் பெற்­றனர்.

இலங்கை வீரர்கள் இரண்டு பேர் வைட் பந்தில் ஸ்டெம்­பிங்கும், நோபோல் பந்தில் பிரீ ஹிட்டை வீணாக்­கி­யது மட்­டு­மின்றி விக்­கெட்­டையும் பறி­கொ­டுத்து சொதப்­பினர்.

139 என்ற வெற்றி இலக்­குடன் கள­மி­றங்­கிய இந்­திய அணி 19.2 ஓவர்­களில் 5 விக்­கெட்­டுக்­களை இழந்து 142 ஓட்­டங்­களைப் பெற்று வெற்­றி­யீட்டி இறு­திப்­போட்டிக்கு நுழைந்­தது. இந்­தி­யாவின் முதல் இரண்டு விக்­கெட்­டுக்­களும் சொற்ப ஓட்­டங்­க­ளுக்கு வீழ்ந்­தாலும் அதன் பி­றகு ஜோடி சேர்ந்த கோஹ்லி மற்றும் ரெய்னா ஆகியோர் அதி­ர­டியாக ஆடினர். இதில் ரெய்னா 25 ஓட் டங்­க­ளு டன் ஆட்­ட­மி­ழக்க அடுத்து வந்த யுவராஜ் நிலைத்து நின்று 35 ஓட்­டங்­களை விளாசி ஆட்­ட­மி­ழந்தார்.

மறு­மு­னையில் சிறப்பாக ஆடிய விராட் கோஹ்லி இறுதி வரை ஆட்­டமி­ழக்­காமல் 56 ஓட்டங்களை விளாசினார், யுவராஜ் ஆட்டமிழந்ததும் டோனி களமிறங்கினார். இந்த ஜோடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது. இறுதியில் இந்திய அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றது.