இலங்கையின் முதலாவது கடற்கரைக்கு முகப்பான சேவை வசதிகளுடன் அமைந்த சொகுசு ஓய்வுநேர நிலாவெளி Oceanfront Condominium களின் தொடர்மனைகளின் சாவிகளை அதன் உரிமையாளர்களுக்கு இன்டர்நஷனல் கொன்சோர்டியம் பிரைவட் லிமிட்டெட் (ICC) கையளித்திருந்தது.

தொடர்மனை ஒன்றை உரிமையாண்மை கொண்டிருப்பதற்கும் அதில் வசிப்பதற்கும் காணப்படும் அனுகூலங்களில் தெளிவு பாதுகாப்பு மற்றும் மனநிம்மதி போன்றன அடங்குகின்றன.

 நிலாவெளியில் அமைந்துள்ள இந்த தொடர்மனைகளில் அவற்றின் உரிமையாளர்கள் வசிக்காத காலப்பகுதியில் அவற்றை மூடிவிட்டு தமது வழமையான சாதாரண வாழ்க்கைக்கு திரும்ப முடியும். குறித்த தொடர்மனைகளின் பராமரிப்பு தோட்டம் கட்டிட பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு பற்றி கவலை கொள்ள வேண்டியதில்லை.

தமது தொடர்மனைகளை முழுமையாக தளபாடங்கள் கொண்டு பூர்த்தி செய்து அவற்றுக்கு எழும் கேள்விகளை நிவர்த்தி செய்து அதனூடாக அனுகூலம் பெறுவதற்கு Oceanfront Condominium களின் உரிமையாளர்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். 

நேரடியாக அல்லது Agoda, booking.com அல்லது Airbnb.com போன்ற இணையத்தளங்களினூடாக தமது தொடர்மனைகளை வாடகைக்கு வழங்கி மேலதிக வருமானத்தை பெற்றுக்கொள்கின்றனர். 

விருந்தினர்கள் பிரவேசம் மற்றும் வெளியேறல் சேவைகள், பராமரிப்பு சேவைகள் மற்றும் ஆடைகள் கழுவல் சேவைகள் போன்றன ICC இனால் வழங்கப்படுவதன் காரணமாக தொடர்மனையை நிர்வகிப்பது என்பது உரிமையாளர்களுக்கு மிகவும் எளிமையான காரியமாகும். 

பலர் ICC இனால் வழங்கப்படும் turn-key தெரிவான தளபாடங்களை பூர்த்தி செய்து, விளம்பரம் செய்து மற்றும் தொடர்மனைகளை நிர்வகித்தல் என்பதனூடாக தமது முதலீட்டை மேலும் கவர்ச்சிகரமானதாகவும் மற்றும் சிக்கலில்லாததாகவும்  மாற்றியுள்ளனர்.

ஜனவரி, ஏப்ரல் மற்றும் டிசம்பர் போன்ற மாதங்களில் பெருமளவு சுற்றுலாப் பயணிகள் இந்த பகுதிக்கு விஜயம் செய்வதுடன் தற்போது கிழக்கு கடற்கரைக்கு விஜயம் செய்யும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் இந்தப் பகுதியில் தங்குமிட வசதிகளுக்கு அதிகளவு கேள்வி காணப்படுகின்றது. 

அவர்களும் ஹோட்டல் அறைகளுக்கு பதிலாக தொடர்மனைகளை வாடகைக்கு அமர்த்துவதை அதிகளவு விரும்புகின்றனர்.

குடும்பமாக விஜயம் செய்யும் சுற்றுலாப்பயணிகள் இரண்டு அல்லது மூன்று படுக்கையறைகளைக் கொண்ட தொடர்மனைகள் தமக்கு மிகவும் சௌகரியமானதாக அமைந்திருப்பதை உணர்வார்கள். 

இவை சாதாரண ஹோட்டல் அறைகளை விட அதிகளவு வசதியானதாக அமைந்திருக்கும். சொகுசு ஹோட்டலுக்கு நிகரானதாக தோட்டம் நீச்சல் தடாகம் மற்றும் கடற்கரை முகப்பு போன்றன அமைந்துள்ளன. 

இப்பகுதியில் காணப்படும் உணவகத்தினூடாக உணவுத் தெரிவுகளும் வழங்கப்படுகின்றன.

திட்டத்தின் 2ஆம் கட்டம் பூர்த்தியடைந்தவுடன்  தமது தொடர்மனைகளுக்கான சாவிகளை புதிய உரிமையாளர்கள் பெற்றுக் கொள்வார்கள். 

கிழக்கு கடற்கரையோர பருவ காலத்தின் அனுகூலங்களை பெற்றுக் கொள்ள எதிர்பார்ப்போர் தமது தொடர்மனைகளை தளபாடங்களால் நிரப்பி, சுற்றுலாப் பயணிகளுக்கு வாடகைக்கு வழங்க முன்வந்துள்ளனர். 

தொடர்மனைகள் மற்றும் முன்பதிவுகள் பற்றிய விபரங்களை  www.oceanfrontnilaveli.com எனும் இணையத்தளத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம். 

நிலாவெளி திட்டம் வெற்றிகரமாக முடிவடைந்தமையை தொடர்ந்து, காலியிலும் இது போன்றதொரு திட்டத்தை நிறுவ ICC முன்வந்துள்ளது. இந்த நிர்மாண நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.