வில்பத்து சரணாலயத்தில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் காடழிப்பு தொடர்பில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

அமைச்சர் ரிஷாத் பதியுதீன் குறித்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.