யாழில் தொடரும் குள்ளர்களின் அட்டகாசம் ; வேலிக்கு  தீ வைப்பு ; மக்கள்மத்தியில் பெரும் அச்சம் !

Published By: Priyatharshan

03 Aug, 2018 | 11:19 AM
image

யாழ்ப்பாணம், அராலி மேற்குப் பகுதியிலுள்ள ஒருவரின் வீட்டு வேலிக்கு நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு தீ மூட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த பகுதியைச் சேர்ந்த பாலசிங்கம் ஜெயதாஸ் என்பவரின் வீட்டு வேலிக்கே தீ மூட்டப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக அராலிப் பிரதேசங்களில் குள்ள மனிதர்களின் நடமாட்டம் காணப்படுவதாகவும், அவர்கள்  இரவு வேளைகளில் வீடுகளுக்குக் கற்களால் எறிவதாகவும் வீட்டு யன்னல்கள் மற்றும் கதவுகளைத் தட்டுவதாகவும் அப்பிரதேச மக்கள் கூறுகின்றனர். 

இந்நிலையில், நேற்று நள்ளிரவு பாலசிங்கம் ஜெயதாஸ் என்பவரின் வீட்டு வேலிக்குத் தீ மூட்டப்பட்டுள்ளதுடன், அயலிலுள்ள அவரது தம்பியின் வீட்டு யன்னல்களைத் தட்டியதாகவும் அவர்கள் கூறுகின்றனர். 

அண்மைக்காலமாக அராலிப் பிரதேசத்தைக் கலக்கமடையச் செய்துவரும் குள்ள மனிதர்களின்  அட்டகாசம்தான் இது என்று அயலவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். 

இச்சம்பவத்தால் அப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் வட்டுக்கோட்டைப் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இருப்பினும் இவ்வாறான சம்பவங்கள் யாழ்ப்பாணப் பகுதியில் தொடர்ந்து இடம்பெற்றுவருகின்ற நிலையில் உரிய தரப்பினரோ அல்லது பொலிஸார்,அரசியல்வாதிகளோ நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லையெனவும் இது கடந்த காலங்களில் இடம்பெற்ற கிறீஸ் பூதங்கள் போன்ற திட்டமிட்ட செயல்களாக இருக்கலாமோ எனவும் மக்கள் கேள்வியெழுப்புகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது...

2026-08-08 14:56:36
news-image

இரத்மலானையில் ஆயுதங்கள், கைக்குண்டு மற்றும் பணத்துடன்...

2026-08-08 14:36:20
news-image

பதுளையில் புதையல் தோண்டி எடுக்கும் நோக்கில்...

2026-08-08 13:20:57
news-image

உயர்தர பரீட்சார்த்திகள் பொறுப்புடன் செயற்பட வேண்டும்...

2026-08-08 13:56:21
news-image

இலங்கை தபால்துறையை நவீனமயப்படுத்துதல் குறித்த கலந்துரையாடல்

2026-08-08 13:51:43
news-image

கட்டானையில் 75 லீற்றர் சட்டவிரோத மதுபானத்துடன்...

2026-08-08 13:20:07
news-image

கிளிநொச்சி திருவையாறுப் பகுதியில் நான்கு ஏக்கர்...

2026-08-08 13:47:48
news-image

கடல் கொந்தளிப்பு எச்சரிக்கை: மீனவ சமூகத்திற்கு...

2026-08-08 13:13:25
news-image

நாடு தழுவிய சோதனைகளில் 431 தரமற்ற...

2026-08-08 13:05:24
news-image

தொம்பகஹவெல - பஹதராவ குளத்தில் நீராடச்...

2026-08-08 12:48:03
news-image

இலங்கை சிறைகளில் உள்ள இந்திய மீனவர்கள்...

2026-08-08 11:54:45
news-image

பல கடற்பகுதிகளுக்கு 'சிவப்பு' மட்ட எச்சரிக்கை!

2026-08-08 11:22:51