கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேசத்தில் அரச மற்றும் தனியாருக்கு சொந்தமான 88 ஏக்கர் காணியினை இராணுவம் சுவீகரிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது எனக்கண்டாவளைப் பிரதேச செயலர் ரி.குமுந்தன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேசத்தில் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நேற்று காலை 9.30 மணிக்கு கிளிநொச்சி தர்மபுரத்தில் அமைந்துள்ள நெசவு நிலைய மண்டபத்தில் இணைத்தலைவர்களான பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், மாவை சேனாதிராசா, இ.அங்கஜன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்
காணி விடயம் தொடர்பாக ஆராயப்பட்டது. கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேசத்திற்கு உட்பட்ட கோரக்கன்கட்டு வை.எம்.சி.ஏ. காணி, புளியம்பொக்கணைச் சந்திக்காணி, நெத்தலியாற்றுப்பகுதியில் உள்ள தனியார் காணி உள்ளிட்ட காணிகள் இராணுவத்தினரின் பயன்பாட்டில் இருந்து வருகின்றன.
இவற்றை உடனடியாக விடுவிக்க வேண்டும் என வடமாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை கருத்து தெரிவித்ததையடுத்து பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இராணுவத்தினரின் ஆக்கிரமிப்புக்கள் நீக்கப்படவேண்டும். குறிப்பாக பொதுமக்களின் காணிகளில் இருந்து இராணுவம் வெளியேறி காணிகளை உரியவர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அதை தீர்மானமாகவும் தெரிவித்தார். இதனையடுத்து கருத்து தெரிவித்த கண்டாவளைப் பிரதேச செயலர், இராணுவத்தினர் கண்டாவளைப் பிரதேசத்தில் 88 ஏக்கர் காணிகளைச் சுவீகரிப்பதற்கு தொடர்ந்தும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதற்கான அனுமதிகள் வழங்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கண்டாவளைப் பிரதேசத்தில் மீள்குடியேறியுள்ள எண்ணாயிரத்து 55 குடும்பங்களில் 956 குடும்பங்கள் சொந்தக்காணிகள் இன்றி கடந்த ஆறு வருடங்களுக்கு மேலாக வீட்டுத்திட்டங்களைப் பெற்றுக் கொள்ளும் தகுதிகளைக் கொண்டிருந்தும் வீட்டுத்திட்டங்களைப் பெற்றுக் கொள்ளமுடியாத நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM