வயிற்று வலி தாங்க முடியாது தனது வயிற்றை பிளேட்டினால் வெட்டிய குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மிருசுவில் தவசிக்குளம் பகுதியைச் சேர்ந்த செல்லத்துரை ஞானசந்திரன் (வயது 55) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் கடந்த 23 ஆம் திகதி கடும் வயிற்று வலியால் அவதிப்பட்ட நிலையில், தனது வயிற்றில் மூன்று இடங்களில் பிளேட்டினால் கீறியுள்ளார். 

அதனால் அதிகளவு இரத்தம் வெளியேறிய நிலையில் உறவினர்களால் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் புதன்கிழமை சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.