யாழ்ப்பாணம், மிருசுவில் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். 

மிருசுவில் வடக்கில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற இச் சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த தம்பு ஜெயானந்தன் (வயது 57) மற்றும் நமசிவாயம் மகேந்திரன் (வயது 58) ஆகிய இருவருமே படுகாயமடைந்துள்ளனர்.

கார் ஒன்றில் வந்த கும்பலே இவர்கள் மீது வாள் வெட்டினை மேற்கொண்டுவிட்டு தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.