வவுனியாவில் மனித உரிமைகள் பவுண்டேசன் என்ற பெயரில் அமைப்பு ஒன்றினை உருவாக்கி அதற்கு விண்ணப்பப்படிவம் தயாரித்து பொதுமக்களிடம் அங்கத்துவப்பணம் பெற்று வந்த உக்கிளாங்குளம் பகுதியைச் சேர்ந்த தொண்டு நிறுவனத்தில் வடபிராந்திய இணைப்பாளராக பணியாற்றிய உத்தியோகத்தர் ஒருவரை நேற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், 

வவுனியாவில் அண்மைக்காலமாக மனித உரிமைகள் பவுண்டேசன் என்ற பெயரில் அமைப்பினை உருவாக்கி அதற்கு விண்ணப்படிவங்களைத்தயாரித்து பொதுமக்களிடம் அங்கத்துவப்பணம் பெற்று வந்துள்ளார். 

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வன்னிப்பிராந்திய பொறுப்பதிகாரி மனித உரிமைகள் பவுண்டேசனுக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கும் தொடர்பு இல்லை. இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பொறுப்பேற்காது என்று தெளிவு படுத்தப்பட்டது. 

இதையடுத்து வவுனியாவில் செயற்பட்டு வரும் தொண்டு நிறுவனம் ஒன்று குறித்த மனித உரிமைகள் பவுண்டேசனுக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை மேற்கொண்டிருந்தது இதையடுத்து நேற்று குறித்த மனித உரிமைகள் பவுண்டேசன் உருவாக்கிய வடபிராந்திய தொண்டு நிறுவனப்பணியாரை கைது செய்துள்ளனர். 

மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்று நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.